Posts

Showing posts from March, 2025

ஏப்ரல் ஒன்று

ஏப்ரல் ஒன்று  ஏமாறுவதும் ஏமாற்றுவதும் மகிழ்ச்சியாக நடைபெறும் நாள்தான் ஏப்ரல் ஒன்று  முட்டாள்கள் தினம். அம்மாவுக்கான நாள் ஒன்று உண்டு. அப்பாவுக்கான நாளும் உண்டு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நாளை உருவாக்கி வைத்த நாம் குழந்தைகளை மட்டும் விட்டு வைப்போமா என்ன ?  குழந்தைகள் நாள் என்று ஒன்றைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.  குழந்தைகளிலும் பெண் குழந்தைகளுக்கு  ஒரு நாள் என்று பிரித்துப் பார்த்துக்  கொண்டாடினோம்.  பெண் குழந்தைகளைக் கொண்டாடும் நாம்  மகளிரை மட்டும் விட்டு வைத்தால் எப்படி என  மகளிர் தினமும் கொண்டாடினோம்.    மனிதர்களோடு மட்டும் கொண்டாட்டங்களை  வைத்துக் கொண்டால் எப்படி ?   நீருக்கு ஒருநாள்.நிலத்துக்கு ஒரு நாள். காட்டுக்கு ஒருநாள். காட்டு விலங்குக்கு ஒருநாள். சிட்டுக் குருவிக்கும்கூட ஒரு நாள். என்று நமது கொண்டாட்டங்கள் பலுகிக் கொண்டே போனது.  நினைத்தாலே சிரிப்புதாங்க வருகிறது.  அட...சிரிப்புக்கும் ஒரு நாள் கொண்டாடினோமே. இப்படி பகுத்துப் பார்த்துப் பார்த்து நாட்களைக் கொண்டாடி வந்தோம். எந்தவிதப் பகுப்புமின்றி அதாவது எந...

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை  "நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை" ஆமாங்க...  நாளும் கிழமையும் பார்த்துக் கொண்டிருந்தால் எளியவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வெளியில் போய் வேலை செய்வதற்கு எந்த நாளைத் தேர்ந்தெடுப்பது? வறுமை எல்லாவற்றையும் கடந்தது. சகுனம் பார்த்தலோ நல்ல நாளோ கெட்ட நாளோ எதுவும் கிடையாது. அவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான். ஒருவர் சிந்தனையில் ஓடுவதெல்லாம் இன்றைய பொழுது நல்லதாய் இருக்க வேண்டும் நல்லதையே நடக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். ஒரு வேளை சோற்றுக்கு வழி பிறக்க ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் வயிறு நிறைந்து விட்டால்.... வேண்டாத  சிந்தனைகள் எல்லாம் வந்து தலையை நீட்டி  எட்டிப் பார்க்கும். அவள் குறுக்கே வந்து விட்டாள். போன காரியம் விளங்குன மாதிரிதான்  என்று பக்கத்து வீட்டுக்காரர்களையும் அக்கம் பக்கத்தினரையும் பார்த்து முணுமுணுக்க வைக்கும்.  ஆக்கம் கெட்டவள்.....ஆக்கம் கெட்டவள் என்று புலம்ப வைக்கும். சிலர் மூஞ்சியில் விழித்தாலே விளங்காது  என்று சொல்ல வைக்கும்.  பாம்புக் கண்ணு....பாண்புக்கண்ணு...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் திருமதி.ரோஸ்லின் ராபின்சன்  ஆசிரியை, திலக் நகர் மாநகராட்சி தமிழ்ப் பள்ளி. மும்பை. நாள்: 29.03.2024 வீரம்விளை நெல்லை எல்லை அகமிருப்பு தீரம்நிறை சான்றோர் உறை துரைகுடியிருப்பு திருமிகு சுவாமிநாதன் அனஸ்தா  இணை மடியிருப்பு சீரமை செவ்விதழ்விரிய பூத்ததிந்த ரோசாப்பூ! அத்தான் ராபின்சனோடு இல்லற பிணைப்பு  கெத்தாய் ஆராரோ பாடவைத்தது பேருவப்பு முத்தாய்ப் பிள்ளை இருவர் பெற்ற பூரிப்பு நற்றாயென நல்லோர் பாராட்டுவதால் வந்ததிந்த சிறப்பு! முதலடி ஜோகேஸ்வரி பள்ளியில் கிடைத்த வரவேற்பு  குறளடி திலக்நகர் பள்ளியில்  தடம் பதிப்பு  சிந்தடி தாகூர்நகர் பள்ளியில் முத்திரை பதிப்பு அளவடி திலக்நகர் பள்ளியில் முடித்தது பணிக்கோர் முத்தாய்ப்பு! கற்பித்தலில் கொண்டீர் தணியா விருப்பு -அதனால் கற்றவர் அனைவர்க்கும் தித்திக்கும் செங்கரும்பு பெற்றவர் யாவர்க்கும் ஆசிரியை நல்அருமருந்து - மாணவர் எறும்பாய்ச் சுற்றிவர படைத்தீர் கல்விவிருந்து! வான்மதியோ பூம்பொழிலோ உன்றன் வனப்பு அன்பலையோ தமிழ்ப் பண்பலையோ உன்றன் உதடசைப்பு மலையிடைப் பிறந்த குறிஞ்சியோநீ என்பதென் குறும்பு  நா...

தொல்காப்பியர் பார்வையில் புல்

புல் என்றதுமே அறுகம்புல் ,கோரைப்புல் என்று வயலோரமாகவும் ஆற்றோரமாகவும் நீர்நிலைகள் அருகிலும் குத்துக் குத்தாக வளர்ந்திருக்கும் சிறிய செடிகள்தான் நினைவுக்கு வரும். இவைதான் புற்கள் என்பது நமக்குத் தெரியும். தென்னைமரமும் பனைமரமும் புல் என்றால் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கும். ஆனால் தென்னை மரமும் பனைமரமும் புல் என்கிறார் தொல்காப்பியர். யாரு தொல்காப்பியரா? தொல்காப்பியர் சொன்னால்  உண்மை இருக்கத்தான் செய்யும் என்பீர்கள். தொல்காப்பியர் தென்னை பனை எல்லாம் புல் என்பதற்கு அவர்கூறும் காரணம் நம்மை அசர வைக்கிறது ஆச்சரியப்பட வைக்கிறது. தொல்காப்பியரின் தாவரவியல் புலமையை எண்ணி வியக்க வைக்கிறது அப்படி என்ன ஆச்சரியப்படும்படி சொல்லிவிட்டார் என்கிறீர்களா? மரத்தின் தண்டுப்பகுதி இருக்கிறதல்லவா? அது கூடுபோல சத்து இல்லாமல் இருக்கும் மரங்களைப் பார்த்திருப்பீர்கள். தென்னை, பனை மரங்களை வெட்டும்போது உள்ளே சோறு  போன்ற பகுதி இருக்கும் . அப்படிப்பட்ட மரங்கள் எல்லாம் புல் வகையைச் சார்ந்தவையாம். அப்படியானால் தென்னை ,பனை மரங்கள்  எல்லாம் புல்லா ?என்று கேட்பீர்கள். நான்சொல்வதைவிட தொல்காப்பியரிடமே கேட்டுத் தெரிந்...

கரிக்காய் பொரித்தாள்....

கரிக்காய் பொரித்தாள்.... ஆசுகவி காளமேகம் புலவர் எந்தப் பொருளில் பாடல் பாடச் சொன்னாலும் பாடுவார். எந்தச் சொல் கொடுத்து அந்தச் சொல்லில் மட்டுமே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் உடனடியாகப்  பாடி முடிப்பார். அதனால் அவரைச் சீண்டிப்பார்க்க வேண்டும் என்றே ஒரு கும்பல் சுற்றிக் கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு சொல்லையோ எழுத்தையோ கொடுத்துப் பாடும்படி கேட்டுக் கொண்டே இருக்கும். காளமேகமும் கேலியும் கிண்டலும் நையாண்டியுமென பாடி முடித்துவிடுவார். இப்படித்தான்  ஒருமுறை பெண் ஒருவர் கரி என்று தொடங்கி உமி என முடியும் படியாகப் பாடல் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார். உமி கரியாகும். கரி எங்காவது  உமியாகுமா? கரியில் தொடங்கிப் பாடச் சொன்னால் புலவர் திகைத்துப் போய்விடுவார் என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு. தன்னை வம்புக்கு இழுக்கவே இந்தப் பெண்  கரி என்று தொடங்கி உமி என்று முடிக்கும்படி பாடக் கூறுகிறார். போகட்டும்....அவள் மூஞ்சில் கரியைப் பூசுகிறேன் என்று நினைத்துக் கொண்டு காளமேகம் பாடிய பாடல் இதோ:  " கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள் பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் _உருக்கமு...

காணாமல் போகிறதா போர் தர்மம்

காணாமல் போகிறதா போர் தர்மம் "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை" என்பார் வள்ளுவர். அறத்திற்கு மட்டுமே அன்பு வேண்டும் என்று சொல்பவர்கள் அறியாதவர்கள். மறத்திற்கும் அதாவது வீரத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும் அன்புதான் துணையாக நிற்கும். நிற்க வேண்டும். அதுதான் அறம். இதுதான் வள்ளுவர் நமக்குச் சொல்லித் தந்த வேத பாடம். வள்ளுவருக்கு என்ன? அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போய்விட்டார். போர் செய்யும் இடம்  எப்படி அன்பு காட்டும் இடமாக இருக்க முடியும்.? எதிரி என்றால் எதிரிநாட்டு உயிர்களும் எமக்கு எதிரிகள்தான். அதனால் யார் எவர் என்று பார்க்காதே. கண்ணிவெடி வைத்தோ ஏவுகணை வீசியோ எதிரி நாட்டை அழிக்க வேண்டும். அதுதான் எமது இலக்கு . இதில் யார் தொலைந்தால் என்ன? யார் மாய்ந்தால் என்ன? என்பதுதான் இன்றைய போர் தர்மம்...இல்லை....இல்லை.  போர் அதர்மம். இன்றைய போர்க்கள காட்சிகளும் நிகழ்வுகளும் நம்மை இப்படித்தான் நினைக்க வைக்கின்றன. மனம் வெம்பிப் பேச வைக்கின்றன. உக்ரைன் போரில் பெற்றோரை இழந்து அநாதையாய் அழுதுகொண்டு திரிந்த ஒரு சிறுவனைத் தொலைக்காட்சியில்  பார்த்ததிலிருந்து இரண்டு...

எட்டாம் நம்பர் வீடு

எட்டாம் நம்பர் வீடு  எட்டாம் நம்பர் வீட்டை எட்டிப்பார்காதே...எட்டிப்பார்க்காதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நீ கேட்க மாட்டியா..."காதைப்பிடித்துத் திருகினார் அம்மா. ஏன் போனால் என்னவாம்? "போகாதே என்றால் போனால் என்னவாம்? எதிர்தா பேசுற..... இனி ஒருவாட்டி எதிர்த்துப் பேசினா வாயிலேயே சூடு வச்சுடுவேன். " "போகல தாயி....எதுக்கு எட்டாம் நம்பர் என்றதும் இப்படி பயப்படுகிறாய்?" உனக்குச் சொல்லிட்டுத்தான்  மறுவேலை பார்க்கணும். எப்பப் பார்த்தாலும் ஏன்? எதற்கு? என்று ஆயிரெத்தெட்டுக் கேள்வி..."அம்மா முணுமுணுத்தபடியே  முகத்தில் முத்துமுத்தாக அனுப்பி இருந்த  வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டார். ஏன் எட்டாம் நம்பர் வீடு என்றதும் அம்மா இப்படிப் பயப்படுகிறார்? வியர்த்து வேறு கொட்டுகிறது. பேச்சில் ஒரு படபடப்பு தெரிகிறது. எட்டாம் நம்பர் வீட்டிற்கும் அம்மாவிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. அதை மறைக்கத்தான் அம்மா இத்தனை பாடுபடுகிறார். ஒரு பக்கம் அம்மாவைப் பார்த்தால்  பரிதாபமாக இருக்கிறது. யார் வீடு? இந்த வீட்டில் அப்படி என்ன மறைக்கப்பட வேண்டிய பொருள் இருக்கிறத...

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் பேச்சுத் துணைக்கு வருவதல்ல நட்பு. பிறர் பேசாது நம்மைப் பார்த்துக் கொள்வதுதான் உயர்ந்த நட்பு. துன்பம் வந்த காலத்து தொலைந்து போகும் நட்பு  நட்புல்ல. சிலர் வலியவலிய வந்து நம்மோடு உறவு கொண்டிட நினைப்பர். நாமும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நம்பிவிடுவோம். அந்த நம்பிக்கையில் மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் சொல்லிவிடுவோம். வீட்டு நிலவரத்தை விலாவாரியாக சொல்லி வைப்போம். இது ஒருநாள் துன்பத்தில் வந்து முடியும். நமக்கு ஏதாவது துன்பம் வந்தபோது அந்த நட்பு காணாமல் போய்விடும். அல்லது நான் அப்பவே நினைத்தேன் என்று முதுகின் குச் பின்னால் தவறான முத்திரை பதிவு செய்துக்கொண்டு திரியும். பெரும்பாலான நட்புகள்  இப்படித்தான் இருக்கின்றன.  யாரும் நெருங்கிப் பழகிவிட்டால்  அவர்களை நண்பர்கள் என்று  எண்ணிவிடாதீர்கள். நட்புக்கான நற்பண்பு இல்லையா அவர் நண்பராக ஏற்றுக் கொள்ளாதீர்கள். பாலுக்கு என்று இயல்பாகவே ஒரு சுவை உண்டு. அது எவ்வளவு காய்ச்சி வற்றிப்போனாலும் அதன் சுவை கூடுமே தவிர குறைவு படாது. அதுதான் பாலின் இயல்பு. அதுபோல நெருக்கடி நேரத்திலும் நட்பின் ...

நிற்பதுவே நடப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே உலகில் இருப்பவை யாவும் பொய்யா? மெய்யா? எது உண்மை? எது பொய்? இருக்கிறது ஆனால் இல்லை. இப்படி ஒரு குழப்பமான கேள்விகள் நம் அனைவர் மனதிலும்  அவ்வப்போது வந்து போகும். அதற்கு விடை தெரியாது அப்படியே கடந்து வந்திருப்போம். அப்படி ஒரு கேள்வி பாரதியின் மனதிற்குள் எழ தன் உள்ளத்தில் தோன்றிய கேள்வியை உலகின் முன் வைக்கிறார் பாரதி. அவரே கேள்வி கேட்டு முடிவாகப் பதிலையும் தந்து விடுகிறார்.இப்படித்தான் உலகம் இருக்குமோ என்று நம்மையும் ஓர் ஆய்வுக் களத்தில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார். பாரதி" உலகத்தை நோக்கி வினவுதல்" என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பாடல் உங்களுக்காக... நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே  கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்மில் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம்  கனவினைப்போற் புதைந்தழிந்ததே போனதால்  நானுமோர் கனவோ?-  இந்த  ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்...

ஆங்காலம் ஆகும்.....

ஆங்காலம் ஆகும்  " காலம் கருதி யிருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்” என்பார் வள்ளுவர். உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் காத்திருக்கும்  பொறுமை வராது. இப்போதே செய்து முடிக்க வேண்டும்.உடனடியாக பெரிய ஆளாக வேண்டும். உலகமெல்லாம் தன் கைக்குள் வர வேண்டும் என்று ஆசைப்படுவர். தங்கள் ஆசையை நிறைவேற்ற எதை எதையெல்லாமோ செய்து பார்ப்பர். ஆனால் எதுவும் கைகூடாது. கடைசியில் என்ன இது.... நான் என்ன செய்தாலும்‌ ஒன்றும் கைகூட மாட்டேங்குதே... என்று ஒரு விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். யாரோ ஒருவர் மட்டுமே இப்படி நடந்து கொள்வதில்லை. நம்மில் பலர் இப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள்தான். ஏன் இந்த அவசரம்? ஆங்காலம் ஆகும். பொறுமையாக இருங்கள்  என்று நமக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தருகிறார் ஔவை. அதைப் பற்றிய ஔவையின் பாடல் இதோ உங்களுக்காக... " எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு"    நல்வழி...

விண்டாரைக் கொண்டாடும் வீடு

விண்டாரைக் கொண்டாடும் வீடு " காயமே இது பொய்யடா காற்றடைத்தப் பையடா " என்றார்  ஒரு சித்தர். ஆனால் , காயமே இது மெய்யா அதில் கண்ணும் கருத்தும் வைய்யடா" என்று விளையாட்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம். இந்த உடம்பு பொய். இது மெய்யென்று நினைத்து அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உடம்பில் நிரப்பி வைக்கப்பட்ட காற்று இனி நான் உனக்குச் சொந்தமில்லை என்று வெளியேறிவிட்டால்.... மறுகணமே நம் பெயர் மாறிப் போகும். பிணம் என்று மறுபெயர் சூட்டி மூலையில் வைத்துவிடுவர். வருவோர் போவோர் எல்லாம் பிணத்தை எப்போது எடுக்கப் போறீங்க என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். பூத்த பூ வாடி கீழே விழுந்து மாய்ந்து போவது போல இந்த உடம்பும் மாய்ந்து போவது உறுதி. வீசிய காற்று மறுபடியும் நம்மை வந்து தொடாது என்பதை நம்புகிற நாம் இந்த வாழ்வு நிரந்தரமற்றது என்பதை மறந்து போய் விடுகிறோம். அதனால்தான் அழகை ஆராதிக்கிறோம். நான் ,எனது என்று ஒரு சுயநல வட்டத்திற்குள் நின்று ஆடுகிறோம். ஆட்டம் போடுகிறோம். "நெருநல்  உளனொருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்றார் வள்ளுவர். ஆம். நேற்று இருந்தவர் இன்று உயிரோடு இல்ல...

ஔவையின் பார்வையில் சாதி

ஔவையின் பார்வையில் சாதி  வீதிக்கொரு சாதிப் பெயர். ஊருக்கொரு சாதிச் சங்கம். பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர். இப்படியாக அண்மைகாலமாக சாதியைப்பற்றிய பிரச்சாரங்களும் முன்னிறுத்திதல்களும்  அதிகரித்துக்கொண்டே வருகின்றன. காரணம் என்ன? என்ற ஆய்வு தேவை இல்லை. ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை. ஆனால் நல்ல கருத்துக்கள் நாளும் விதைக்கப்பட வேண்டும். பயிற்றுவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாதிய வன்மங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார் வள்ளுவர். "சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதி. " உலகினில் சாதிகள் இல்லை -என் உள்ளத்தில் வேற்றுமை இல்லை கலகத்தைச் செய்கின்ற சாதி- என் கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?" என்று கேட்டவர் பாரதிதாசன். "தர்மத்தின் கூர்மையோடே  எவனோ செய்தான் சாதியை" என்று அறச்சீற்றம் கொள்வார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இப்படி சாதி என்பது தேவையில்லாத என்று என்பது ஆன்றோர் கருத்து. அறிந்தோர் கருத்து. இவர்கள் எல்லாம் சாதி இல்லை...இல்லை என்று பேசியிருக்கும்போது ஔவை பேசாமல்  இருந்திருப...

சாதி இரண்டொழிய

சாதி இரண்டொழிய .... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்றார் வள்ளுவர். பிறப்பால் அனைவரும் ஒன்று. மேல் கீழ் என்ற பாகுபாடு இல்லை என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்துச் சொல்லித் தந்துவிட்டார். சாதி என்னும் பாகுபாடு இருக்கும்வரை சமூகநீதி முற்றிலுமாக கிடைத்துவிடும் என்று நம்பமுடியாது. நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களும்  இன்று சாதிய அமைப்புகளை   வைத்துக்கொண்டு சாதி கூட்டங்களை நடத்திக்கொண்டு வருவது சற்று நெருடலாகத்தான் உள்ளது.    சாதி என்ற பெயரால் ஏற்றத்தாழ்வு  அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.  அது முற்றிலும் களையப்பட வேண்டும்  என்றால் சமூக நீதியை நோக்கியே  நம் பயணம் இருக்க வேண்டும.   இப்போது ஔவை சாதியைப் பற்றி என்ன கூறுகிறார் என்று கேளுங்கள். "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி" என்கிறார் ஔவை. உலகில் எத்தனை சாதி உண்டு என்று கேட்டால் இரண்டே சாதிதான் உண்டு. ஒன்று ஆண்சாதி. இன்னொன்று பெண்சாதி என்று சிலர் பெருமையாகச் பேசுவர். ஆண்,பெண் என்பது சாதி அல...

தீது ஒழிய நன்மை செயல்

தீது ஒழிய, நன்மை செயல் தீமை ஒழிய வேண்டுமா ? நன்மை செய். இது யாருக்குத் தெரியாது? நன்மை செய்தால் தீமை காணாமல்  போகும். அனைத்து மதங்களும் இதைத்தானே சொல்கின்றன. பெரியவர்களும் இதையேதான் சொல்லித் தருவார்கள். எத்தனை பேர் சொல்லித் தத்தித் என்ன? ஒரு கருத்தினை மனதில் பதிய வைக்க வேண்டுமா? எத்தனை முறை வேண்டுமானாலும்  சொல்லலாம்.  இதையேதான் ஔவையும் தனது  நல்வழியின் முதல் பாடலில் சொல்லித் தந்திருக்கிறார். வாருங்கள் ஔவை என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். புண்ணியம் ஆம்; பாவம் போம்; போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்; எண்ணுங்கால், ஈது ஒழிய வேறு இல்லை, எச் சமயத்தோர் சொல்லும்; தீது ஒழிய, நன்மை செயல்!                    நல்வழி பாடல் 1 "மனிதன் பிறக்கும் போதும் அவன் இறக்கும் போதும்  அவன் கூடவே வருவது அவன் செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான். சேர்த்து வைத்த சொத்தோ பொருளோ புகழோ படித்த படிப்போ பெற்ற பதவியோ எதுவும் கூட வரப் போவதில்லை. அதனால் உலகில் வாழும் காலம்வரை தீமை செய்யாது விலகி இரு. நன்மை செய்து புண்ணிய...

நல்வழி- கடவுள் வாழ்த்து

Image
நல்வழி- கடவுள் வாழ்த்து  நல்வழி ஔவையாரால் பாடப்பட்ட  நீதி நூல். மக்களை நல்வழிப்படுத்த அக்கால புலவர்கள் மெனக்கெட்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ நமக்குப் பாட வருகிறது பாடிவிட்டுப் போவோமே என்று கடமைக்காக ஏனோதானோவென்று எழுதப்பட்டவை அல்ல. பார்த்துப் பார்த்து  செதுக்கி வடிவமைக்கப்பட்டவை. மனங்களைப் பண்படுத்த உலக எதார்த்தத்தைச் சொல்லித் தர விழிப்புணர்வு ஏற்படுத்த எச்சரிக்கை செய்து கவனமாக இருக்க வைக்க  தமிழ்ப்புலவர்களைத் தவிர கரிசனம் மிக்க இன்னொருவர் உலகில் இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஒருவரா இருவரா அனைத்துப் புலவர்கள் எழுதிய பாடல்களும் ஏதோ ஒரு வகையில் நம் மனதிற்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. மன்னர்களைப் புகழ்ந்து பாடும் பாடலிலும் மன்னா! மக்கள் மீது கரிசனாமாக நடந்துகொள்ள என்ற செய்தி இருக்கும். கூடவே பொதுமக்களாகிய நமக்கும் ஒரு செய்தி இல்லாமல் இருக்காது. மக்களை நல்வழிப் படுத்துவதாகவே அனைத்துப் பாடல்களும் அமைந்துவிடுகிறது. அருமையான பாடல்களைப் பாடிய புலவர்கள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஔவையார் என்றால் மிகையாகாது. ஔவை எழுதி...

கள்ளி மேல் கை நீட்டார்

மலர்களைப் பார்த்ததும் இயல்பாகவே  மகிழ்ச்சி அரும்பும். சிலருக்கு தொட்டுப் பார்க்க ஆசை வரும். சிலருக்கு முகர்ந்துப் பார்க்க ஆசை வரும். இன்னும் சிலரை அந்த இடத்தைவிட்டு  கடந்து போக  விடாதபடி  கால்களை அங்கேயே கட்டிப்போட்ட படி நிறுத்தி வைக்கும். இப்படி மலர்கள் என்றால் அனைவருக்கும் ஏதோ ஒருவகையான ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். பெண்கள் மலரைக் கண்டதும்  கொய்து கொண்டையில் வைத்துக் கொள்ள  வேண்டும் என்று  ஆசையாகக் கை நீட்டுவர். ஆனால் எல்லா மலர்களும் சூடிக்கொள்ள உகந்ததாக இருக்குமா? நாம் பார்க்கும் போது அழகாக சிரிக்கிறது கள்ளி மலர்.  அதற்காக அதனைக் கொய்து தலையில் சூடிக்கொள்ளவா முடியும்? அவற்றைப் பார்க்கும் போதே அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால் யாரும் கள்ளிச் செடியின் மீது கை நீட்டமாட்டார்கள்.  அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவராக ஒருவர்  இருக்கின்றார். அதனால் பலரின் கண்கள் அவர்மீது  இருக்கும். அவருடைய பணம் பலரைக் கவரலாம். ஆனால் அவர் செல்வம் யாருக்கும் பயன்படாமையாக ...

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்  எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் நிச்சயம் இருக்கும். ஒருவர்மீது அதிதீவிர நம்பிக்கை  வைத்து விட்டோம். அதனால் அவரிடமிருந்து எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. அந்த எதிர்பார்ப்பு நடைபெறாதபோது  விரக்தி ஏற்படுகிறது. ஏமாற்றமடைந்து புலம்ப  ஆரம்பித்துவிடுவோம். அதிக நம்பிக்கை வைப்பதுகூட  பல நேரங்களில் ஆபத்தாக முடிவதுண்டு. குடும்பத்தில் சண்டை வருவதற்கான முதற்காரணமே எதிர்பார்ப்புதான். அதனால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது என்பதல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் எந்தக் குடும்பமும் நகராது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த செயலும் நடைபெறுவதில்லை.  ஊதியம் கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பில்தான் வேலை நடைபெறுகிறது. ஊதியம் கிடைக்காது  என்று தெரிந்தால் யாருமே எந்த வேலையும் செய்ய முன்வர மாட்டார்கள். அந்தக் காலத்தில் புலவர்கள்  மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வர். மன்னர் எதுவுமே கொடுக்கமாட்டார்  என்றால் யார் பாடுவார்? இப்படித்தான் ஒரு மன்னனிடம் ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஒரு  புலவர் அரண்மனைக்குச் சென்றிருக்கிற...