Posts

Showing posts with the label கம்பரின் சொல்விளையாட்டு -வண்மை இல்லை பாடல் விளக்கம்

கம்பரின் சொல் விளையாட்டு

கம்பரின் சொல்விளையாட்டு "கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்  கவி பாடும்" என்று ஒரு பழமொழி உண்டு. அப்படி இருக்க கம்பனிடம்  என்ன இல்லை என்பதைக் கண்டீர்கள்  என்ற கேள்விக் கணைகள் என்னை நோக்கி வீசப்படுவது  எனக்குப் புரியாமலில்லை. பொறுமை...பொறுமை... நான் சொல்லி முடிக்கும் வரை பொறுத்திருங்கள் கம்பனிடம் இல்லாததா? இல்லை...இல்லை...இல்லையோடு  கம்பன் நடத்திய கவி விளையாட்டு ஒன்று இருக்கிறது. வாருங்கள்  நாமும் ஓரமாய் நின்று கம்பரின் கவி விளையாட்டைக் கண்டு களிப்போம். உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுங்கள்  என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? மலை இருக்கிறது. காடு இருக்கிறது. பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன. பள்ளி இருக்கிறது.  ஆறு இருக்கிறது.  குளம் இருக்கிறது  என்று இருக்கிறது இருக்கிறது என்ற சொல்லை அடுக்கிக் கொண்டே போவோம். இருக்கிறது என்று சொல்வதில்  பெருமைப்படும் நாம் இல்லை என்ற சொல்லைச் சொல்லத் தயங்குவோம். ஏன் இந்தத் தயக்கம்? ஏனென்றால் இல்லை என்ற சொல் வெறுமைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய சொல் என்பது நமது கணிப்பு. அதனால் தான் இந்தத் தயக்கம். இல...