சிரிப்பு மத்தாப்பு
சிரிப்பு மத்தாப்பு "வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்" ஆனால் எவ்வளவுதான் சிரிக்க வைத்தாலும் சிரிக்காமல் கஞ்சி போட்ட சட்டை மாதிரி எப்போதும் சிலர் விறைப்பாகவே இருப்பார்கள். அது அவர்கள் சுபாவம் . அவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சிரிப்பை அள்ளி விடுவோர் உண்டு. பொதுவாக பேச்சாளர் அனைவருக்குமே நகைச்சுவை உணர்வு இருக்கும். அப்படிப் பேசினால்தான் பேச்சில் ஒரு சுவாரசியம் இருக்கும். கூட்டத்தினரைக் கடைசிவரை இருக்கையில் இருக்க வைக்க முடியும். கிருபானந்த வாரியார் பேச்சில் நல்ல நகைச்சுவை இருக்கும். சிலேடைப் பேச்சும் இருக்கும். மேலோட்டமாக ஒரு பொருளும் பிரித்துப் பொருள் கொண்டால் இன்னொரு பொருளும் வைத்துப் பேசுவார். சிலேடைப்புலி கி. வ. ஜகநாதன் பேச்சுக்குப் பேச்சு இரட்டை அர்த்தம் கொண்ட சொற்களைப் பயன்படுத்துவார். ஒருமுறை கி.வா. ஜ வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார். கடைசிவரை இருந்து கேட்டுவிட்டுப் போங்கள் என்று கேட்டுக் கொண்டார் வாரியார். எனக்கு வேறு பணி இருக்கிறது. இறுதிவரை இருக்...