படைப்பு பல படைத்து ...
படைப்பு பல படைத்து.... சங்கப் பாடல்களில் காதலும் வீரமும் நிரம்ப இருக்கும்.காதல் மட்டுமல்ல நல்ல கருத்துள்ள பாடல்கள் ஏராளம் உண்டு. படித்து படித்த இன்பறுத்தக்க கருத்தாழமிக்கப் பாடல்கள் உண்டு. உவமை நயங்கள் ஓவிங்களாக காட்சிகளை நம் கண்முன் கொண்டு நிறுத்தும். புலவர்களால் மட்டும்தான் பாட்டெழுதி பரிசில் வாங்கிச் செல்ல முடியுமா? நாங்களும் புலவர்களுக்கு இணையாக பாடல் எழுதும் புலமை பெற்றவர்கள்தாம் என்று நிரூபித்த பல மன்னர்கள் உண்டு. வாழ்க்கையை அனுபவித்து மன்னர்கள் பாடிய பல பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணமுடியும். அறத்தோடு வாழ வேண்டும் என்று அறவுரைகளைத் தம் கவிதையில் தந்தனர். வீரத்தைப் புகழ்ந்து பாடி நம்மைப் பிரமிக்க வைத்துள்ளனர். இல்லறத்தைப் பாடி இனிமை தந்துள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறுபிள்ளையின் குறும்பை அப்படியே நம் கண்முன் படைக்கிறார் ஒரு புலவர். இல்லை...இல்லை. புலமை மிக்க ஒரு மன்னன். பாண்டியன் அறிவுடை நம்பி என்ற ஒரு மன்னன் உண்டு. அவர் பெயருக்கு ஏற்றபடியே நல்ல அறிவுடையவர். அ...