வண்ணப்பெட்டி
வண்ணப்பெட்டி வண்ணப்பெட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு அலுங்கமாமல் குலுங்காமல் நடந்து சென்றாள் சந்திரா. தலையில் வண்ணப்பெட்டியை வைத்து சுமந்து செல்வது ஏதோ கிரீடத்தை தலையில் வைத்துச் சுமந்து செல்வது போன்ற நினைப்பு. கூடவே அம்மாவும் சின்ன தங்கை சுமதியும் நடந்துவர திருவிழாவில் ஊர்ந்து செல்லும் ரதம்போல மெதுவாக நடந்து சென்றாள் சந்திரா. இடையிடையே... "கல்லு தட்டிராம....பார்த்துப்போ" என்று அம்மா டைரக்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். "ஏய்...ஏய்...மாடு வருது...ஒதுங்கு...ஒதுங்கு..." தங்கை சுமதி குரல் கொடுத்தாள். போதாததற்கு அம்மா ஓடிவந்து பெட்டியைப் பிடித்துக் கொண்டார்கள். "கையை எடுங்கம்மா...நான் கீழே போடமாட்டேன்.." சொல்லிப் பார்த்தாள் சந்திரா. "ஒண்ணும் இல்லை நட...நட.."என்றார் அம்மா.. எதிரே வந்த...தங்கம்.... "என்ன பாட்டி கலியாண வீட்டுக்கா... மெதுவா....பார்த்துப் போங்க...ஆடுமாடு வருகிற நேரம் சின்னப்பிள்ளை கீழேப்போட்டு முறுக்கு உடைத்துடப் போகுது "என்று கரிசனமாகச் சொல்லி விட்டுச் சென்றார். அவ்வளவுதான் இன்னும் க...