மௌனம் பேசும்
மௌனம் பேசுமா? வாய் திறந்து பேசுவதுதானே பேச்சு... மௌனம் எப்படி பேசியிருக்க முடியும்... மௌனம் இதுவரை பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை. இது நமது கணிப்பு. பேசிய வார்த்தைக்கு ஒரு அர்த்தம். பேசாத வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கப்படும். ஒருவரோடு சண்டை போடும்போது எதிராளி அமைதியாகப் போய்விட்டால்... அதற்கு எதிராளி தாழ்ந்து போய்விட்டார். தனது இயலாமையை ஒத்துக் கொண்டு பேசாமல் போய்விட்டார் என்று நினைப்போம். அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று போயிருப்பாரோ என்று நினைப்போம். இன்னும் நான்கு பேரைக் கூட்டி வருவதற்காக சென்றிருப்பாரோ... என்ன நடக்கும் என்று பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருப்போம். அதுவும் நடக்கலியா... ஏதோ வன்மம் வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று புரிந்து கொள்வோம். அதுவும் இல்லையா...எதுக்குமே லாயக்கில்லாதவர் என முத்திரை குத்திவிட்டு நம்போக்கில் போய்க் கொண்டே இருப்போம். அதுவும் இல்லையா....