Posts

Showing posts with the label ஆசிரியருக்கான இலக்கணம் என்ன-நன்னூல்

ஆசிரியருக்கான இலக்கணம்

ஆசிரியருக்கான இலக்கணம் என்ன ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்படித்தான் நாம் நினைத்திருப்போம். யார் ஆசிரியர் என்று கேட்டால் "எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பார் அதிவீரராம பாண்டியர். அதெல்லாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? அதெப்படி சொல்ல முடியும்? ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்  என்பது ஆசிரியருக்குத் தெரியாததா என்ன? இப்படியும் சிலரது முன்னோட்டம் இருக்கலாம். ஆனால் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒருவர் இலக்கணமே எழுதி வைத்திருக்கிறார் கேளுங்கள். பவணந்தி முனிவர் தனது நன்னூல்  என்னும் இலக்கண  நூலில் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்துள்ளார். .“குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூல்உரை ஆசிரியன்னே!” என்கிறார் பவணந்தியார். இவர் இந்த நூற்பாவில் ஆசிரியர் களுக்குரிய பத்து வகை இலக்கணங்களை எடுத்தியம்பியுள்ளார்.  குலன் : ஒழுக்கமுடைய சி...