நிழல்நீரும் இன்னாத இன்னா....
நிழல்நீரும் இன்னாத இன்னா... " நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாஆம் இன்னா செயின்" குறள் : 881 நிழல் - நிழல் நீர் - தண்ணீர் இன்னாத - தீங்கு செய்தால் இன்னா - தீயவையாம் தமர் - சுற்றத்தார், உறவினர் நீரும் - நீர்மை இயல்பும் இன்னாவாம் - தீயனவாம் இன்னா - துன்பம் செயின் - செய்தால் நிழலில் கிடக்கும் நீர் துன்பம் தரும் தன்மை கொண்டதாக மாறினால் அதனை அருந்துவது தீங்கை விளைவிப்பதாகவே இருக்கும். அதுபோல உறவினர் உட்பகை கொண்டவராக இருந்தால் அவர்களால் துன்பமே வந்து சேரும். விளக்கம் : நிழலில் கிடக்கும் நீர் முதலில் குளிர்ச்சியாக இருக்கும். அருந்தி ஆனந்திப்போம். பலநாள் அப்படியே நிழலில் கிடக்கும் நீரில் புழுக்கள் தோன்றி குடிப்பதற்கு லாயக்கற்ற நீராக மாறிவிடும். முதலில் இனிமை தந்த நீரல்லவா? அப்படி என்ன தீங்கு விளைவித்துவிடப் போகிறது என்று அருந்தினா...