Posts

Showing posts from September, 2020

தூய்மை என்றும்....

                  தூய்மை என்றும்......                         மெட்டு: (ஒருதாய் மக்கள் நாம் என்போம்...)    தூய்மை என்றும் பேணிடுவோம்   தொடாமல் விலகி இருந்திடுவோம்   சுத்தம் ஒன்றே மருந்தென்போம்   தொடாது வாதை சொல்லி வைப்போம்  தொடாது வாதை சொல்லி வைப்போம்                                                                              _ தூய்மை           கொரோனா தொற்றைத் தடுத்திடவே தொடர்ந்து தனிமையில் இருந்திடுவோம் தொடரும் துன்பத்தைத் தடுத்திடுவோம் தொய்வில்லா வாழ்வைத் தொடர்ந்திடுவோம் தொய்வில்லா வாழ்வைத் தொடர்ந்திடுவோம்                                     ...

பாராட்டு மடல்

                              பாராட்டு மடல்                               தாமரைச்செல்வி                               தலைமை ஆசிரியை                கே.டி.கெய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப் பள்ளி       எங்கும்  தமிழுலா  பொங்கும் புகழுலா நல்லோர் உறைதலா (ல்) மாதவக்குறிச்சி பேருலா மாண்புலா வேலுமயில் பெருமாள் மடியுலா கண்டுலா வந்திட செந்தாமரை பூத்தலா! அன்புலா ராஜூ கரம் பிடித்தலா இறைவகுத்தலா தேனிலா கண்டுவத்தலா தெய்வீக ராகம் மீட்டலா பால்நிலா பிள்ளை இருவராதலா (ல்) இல்லம் மகிழ்தலா வானிலா தாமரை கண்டு முகம் நாணலா ! அதிரா நடையுலா அழகு தேருலா உதிரா புன்னகை உமக்கே உரித்தாதலா நதியாய் நடத்தலா(ல...

வாழ்த்துகிறேன்

    வாழ்த்துகிறேன் வெள்ளிவிழா நினைவுகள் வேர்ப்பலாவாய் இனிக்கட்டும் பொன்விழா கனவுகள் நனவாகி  வாழ்த்துரை வழங்கட்டும்  மணிவிழா மணவாழ்க்கைக்கு மகுடம் சூட்டி  மகிழ்ந்திடட்டும் நூற்றாண்டுவிழா  நாட்களும் வரமாய் உமக்கு வாய்த்திடட்டும் 

பணிநிறைவுப் பாராட்டு மடல்

      கவினணி புனைந்த எழில்மிகு வனத்தாய் கலையணி கொண்ட காட்சிக்கு விருந்தாய் மலையணி எங்கும் இயற்கை மருந்தாய எழிலணி ஓரணிதிரள் சின்னமனூரில் அவதரித்தாய்! அறப்பாணியாளர் அப்பா சண்முகவேலோடு அன்பாய் களப்பணி ஆற்றிட விஜயாவும் இணைந்தாய் இல்லறப்பணி இன்பமாய் பத்மாவதி பிறந்தாய் நல்லறப்பணி சாட்சியாயினர் தம்பியரும் அருமருந்தாய்! முதற்பணி கல்வியென உத்தர்பாரதியில் சீரடி பதித்தாய் கலைப்பணிக்கு சோமைய்யாவைத் தேர்வு செய்தாய் பெரும்பணிக்காய் கலினாவில் முதுகலை பயின்றாய் ஆசிரியப்பட்டயப் படிப்பிலிலும் முதல்நிலை பெற்றாய்!  நற்பணி ஆற்றிட பிரைட் பள்ளிக்குள் நுழைந்தாய்  உலகணி ஆங்கிலத்தை உவப்போடு கற்றிட வைத்தாய்.  கவியணி புனைந்து கற்பிக்கும் பாங்கினை வகுத்தாய்  தனியணி எம்பாணி எனத் தனித்துவம் படைத்தாய்!  ஊரணி உவந்திட ஓயாது உழைத்தாய்  தேரணி மகிழ்வாய்ப் பணி உயர்வு அடைந்தாய்  தாரணியாய் தக்கதோர் ஆசிரிய கூட்டணி அமைத்தாய் முற்போக்குக் கூட்டணியாய்ப் பள்ளி் பெயர் துலங்க வைத்தாய்! வேற்றணி இவரென எவரையும் வெறுக்காய் குன்றிமணியளவும் குறையா குணமே உனதாய்  நவமணியாம் திருமணியாய்த்...

வாழ்த்துப்பா

            வாழ்த்துப்பா கூடல் நகரில் கூடிய முதலணி  கூடி செய்து வந்தது தமிழ்ப்பணி மராட்டியத்தில் மலர்ந்த ஆசிரியர் கூட்டணி  ஆற்றிவருவது நல்லதோர் அறப்பணி! ஆசிரியப்பணி என்பது அறப்பணி  அறப்பணிதான் குழுமத்தின் பொதுப்பணி பொதுப்பணி என்பது குமுக நற்பணி நற்பணி ஆற்றுவது ஆசிரியர் முதற்பணி!  ஆசிரியர் யாவரும் நின்றன் பின்னணி  குழுமத்தின் செயல் எப்போதும் முன்னணி  உம்  தலைமையில் திரளும் மாபெரும் பேரணி  தமிழுக்கு வாய்த்ததோர் நல் கூட்டணி!   வாணிக்குச் சேவை செய்யும் தோணி   நீவீர் எனல் உயர்வு நவிற்சி அணி   பாரணி தமிழுக்கு அழகுத் தேரணி இது   என்பது வேற்றுப் பொருள் வைப்பணி!    தமிழுக்காய் உழைக்கும் வல்லொலி     என்பது என் தற்குறிப்பேற்ற அணி    வானன்ன சேவை புரிவீரென வாழ்த்தி    மகிழ்வது நான் கூறும் உவமையணி!     ஓரணியாய்த் திரள்தலால் பெற்றதிந்த உயர்வணி     ஓடி வந்து உதவுதல் குமுகத்தின் தனிப்பாணி     தரணியில் உம் பணி முதலணியாய்த் திகழ     ...

காலத்தினாற் செய்த நன்றி

காலத்தினாற் செய்த நன்றி... "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்  ஞாலத்தின் மாணப் பெரிது "                                                        குறள் : 102                                                         காலத்தினால் _ ஏற்ற காலத்தில் செய்தநன்றி _ செய்த உதவி சிறிதெனினும் _அளவில் சிறியதாயினும் ஞாலத்தின் _ உலகத்தைவிட மாணப் பெரிது _ மிகப் பெரியது உரிய காலத்தில் செய்யப்படும் உதவியானது சிறிதாக இருப்பினும் அது இவ்வுலகத்தைவிடப் பெரியதாகக் கருதப்படும். விளக்கம்: ஒருவனுக்கு மிகவும் தேவையாக இருக்கும் நேரத்தில் செய்யப்படும் உதவியானது  அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் அந்த உதவியானது எப்படிப்பட்ட  தேவையான  காலத்தில் செய்யப்பட்டது என  எண்ணிப் பார்க்குமிடத்து அதன் மதிப்பு  உலகைவிட ப...

அன்பகத் தில்லான் உயிர் வாழ்க்கை....

          அன்பகத் தில்லான் உயிர்வாழ்க்கை    " அன்பகத்  தில்லான் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்     வற்றல் மரம் தளிர்த் தற்று "                                     குறள்.   :   78 அன்பகத்தில்லான் _ உள்ளத்தில் அன்பு இல்லாதவன் உயிர்வாழ்க்கை _ உயிர் வாழ்தலாவது வன்பாற்கண் _ கொடிய பாலை நிலத்தில் வற்றல் மரம் _ பட்ட மரம் துளிர்த் தற்று _ துளிர்த்தது போன்றது       உள்ளத்தில் அன்பில்லாமல் வாழும் வாழ்க்கையானது வளமில்லாத கொடிய பாலை நிலத்தில் பட்டமரம்   துளிர்விடுவது  போன்றதாகும். விளக்கம் :   உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாத  ஒரு வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.  அந்த வாழ்க்கை  வாழ்ந்தும் வாழாதது   போன்றதே ஆகும்.    கொடிய பாலைநிலத்தில் பட்டுப் போன ஒரு   மரமானது மறுபடியும் துளிர்விட    வாய்ப்பே  கிடையாது.  அதுபோன்றதுதான்அன்பில்லாதவர்களில்   குடும்...

தேறற்க

      தேறற்க யாரையும்..... " தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்  "                     குறள்  :          509 தேறற்க _ தேர்ந்தெடுக்க யாரையும் _ எவரையும் தேராது _ ஆராயாது தேர்ந்தபின் _ தேர்ந்தெடுத்த பின்னர் தேறுக _  தேர்ந்தெடுப்பீராக  தேறும் _ செய்யத்தக்க  பொருள் _ செயல் யாரையும் ஆராயாமல் தேர்ந்தெடுக்கக் கூடாது. நன்றாக ஆராய்ந்த பிறகு அவரிடம் உள்ள அறிவைத் தேர்ந்த  பின்னர் அதனை சந்தேகிக்கக் கூடாது.  English couplet : "Trust no man whom you have not fully tried, when tested In his prudence proved confide." Explanation. : Let a king choose no one without previous consideration ; After he has made his choice, let him unhesitatingly Select for each such duties as are appropriate. Transliteration : "Therarka Yaaraiyum Theraadhu Therndhapin Therika Therum porul "

எண்ணித் துணிக கருமம்...

          எண்ணித் துணிக கருமம்... "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு "                                       குறள் :  467 எண்ணி _ ஆராய்ந்து பார்த்து துணிக _ தீர்மானிப்பீராக கருமம் _  செயல் துணிந்தபின் _துணிந்துவிட்ட பின்னர் எண்ணுவம் _  ஆராய்ந்து கொள்ளலாம் என்பது  _  என்று சொல்வது இழுக்கு  _  தவறு நன்றாக சிந்தித்து அதன்பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும். செயலைத் தொடங்கிய பின்னர் அதைப் பற்றிப் சிந்தித்துக் கொள்ளலாம்  என்பது தவறு. விளக்கம்  :   ஒரு செயலை செய்யத் தொடங்கும்  முன்னர் ஆயிரம்முறை யோசிக்க வேண்டும்.  அதனால் வரும் சாதக பாதகங்களைப் பற்றி  சிந்திக்க வேண்டும்.  நம்மால் கூடுமா...கூடாதா  என்ற ஆராய்ச்சி வேண்டும்.  இதனால் என்னென்ன பலன்  கிடைக்கும் என்பதைப் பற்றி எண்ணிப்   பார்க்க வேண்டும்.  இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?   என்ற நோக்கிலு...

விசும்பின் துளிவீழின் அல்லால்....

Image
  விசும்பின் துளிவீழின் அல்லால்.... விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலை காண்ப தரிது "                                       குறள்  :  16 விசும்பின் _ வானத்தின் துளி _ மழைத்துளி வீழின்  _  விழுந்தால் அல்லால்  _ அன்றி  மற்று _ அதன் பின்னர் ஆங்கே _ அவ்விடத்தே பசும்புல் _ பசுமையான புல் தலை _  புல்லின் நுனி காண்பது _  காணல் அரிது _  அருமையானது, காணமுடியாது வானத்திலிருந்து மழைத்துளி விழவில்லை  என்றால் அவ்விடத்து ஒரு பச்சைப்புல்  நுனியைக்கூட காண்பது அரிதாகிவிடும். விளக்கம் : மழைத்துளி நிலத்தில் விழாவிட்டால்  அவ்விடத்தில் உயிர் வாழ்க்கைக்குத்  தேவையான நீர் இல்லாமல் போய்விடும். புல் பூண்டு முளைப்பது அரிதாகிவிடும். புல் பூண்டே முளைக்காதபோது மனிதன் வாழ்வது எப்படி? மனித வாழ்க்கைக்குத் தேவையான  உணவு கிடைப்பது எப்படி?  மழை இல்லை என்றால் உணவு இல்லை. உணவு இல்லை என்றால் உயிர் இல்லை. உயிரினங்கள் அனைத்து...

பழக்கவழக்கம்

              பழக்கவழக்கம் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் " தொடர்ந்து ஒரு செயலை செய்துகொண்டு வரும்போது  நாம் செய்கிற செயலில் நல்ல புலமை ஏற்படுகிறது. நல்ல தமிழை உச்சரிக்கத்  தெரியாதவர்கள்கூட தொடர்  பயிற்சியினால் நன்கு பேச முடியும். பழக்கம் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டே  இருக்கும்போது அது பழக்கவழக்கமாக  மாறி விடுகிறது.   " காலையில் எழும்பு ."  அம்மா அடிக்கடி சொல்லி அலுத்துப்   போய்விட்டார்.   "வெளியில் போய்வந்தால் கை, கால்களைக்  கழுவு  ....சொல்லி சொல்லி வெறுத்தே   போய்விட்டேன் "பெரும்பாலான வீடுகளில்  அம்மாவின் அங்கலாய்ப்பு இப்படி இருக்கும்.   "எடுத்த பொருளை எடுத்த இடத்தில்  வைக்க வேண்டும். கண்ட கண்ட  இடத்தில் வைக்காதே. குப்பையைக் குப்பைக் கூடையில் போடு. தலை சீவினால் சீப்பில் இருக்கும்  முடியை எடுத்துவிட்டு சீப்பைச் சுத்தமாக  வைக்க வை. பள்ளியில் இருந்து வந்ததும்  புதைமிதியைக்  கழட்டி  வைக்க வேண்டிய இடத்தில் வை." இவை எல்லாம்...

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்....

  உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்..... உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க வீடும் இருந்தால் போதும். இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளாகும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவு செய்வதற்குதான் மனிதன் ஓடி ஓடி உழைக்கிறான். ஆனால் அந்த உடை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. எளிமையாக அதாவது நான்கு முழம் இருந்தால் போதுமாம். ஔவை சொல்கிறார் கேளுங்கள். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண்புதைந்த மாந்தர்குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே                                           நல்வழி.   :  28 மனிதன் உண்பது ஒரு நாழி அளவு சோறு மட்டுமே. உடுப்பது நான்கு முழ அளவு உள்ள துணி.. ஆனால் அவன் எண்ணம் மட்டும் எண்பது கோடியாக இருக்கிறது. அதனால் தன்னால் எதையும் தெளிவாக சிந்தித்துப் பார்க்கும்  திறன் குற...

முயற்சி திருவினையாக்கும்.....

முயற்சி திருவினையாக்கும்.... " முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை  இன்மை புகுத்தி விடும்  "                                        குறள்.   :   616    முயற்சி  _  முயலுதல்    திருவினை _  செல்வம்    ஆக்கும் _ உண்டாக்கும்    இன்மை  _  இல்லாதிருத்தல்   புகுத்திவிடும் _ சேர்த்துவிடும்   முயற்சி செய்து கொண்டிருப்பவனிடத்தில் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும்.எந்தவித   முயற்சியும் செய்யாமல் இருப்பவன் வீட்டில் வறுமை குடி கொண்டுவிடும். விளக்கம் : செயல்பட வேண்டும் என்ற  ஆர்வம் இருந்தால் போதும். தொடர்ந்து செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அந்த  உழைப்பானது செல்வத்தைப் பெருகச் செய்யும். வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்க்கும். பாடுபட்டு உழைப்பவனுக்கு அந்த உழைப்புக்கு ஏற...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்....

      உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்.... " உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது   தள்ளினுந் தள்ளாமை நீர்த்து "                                    குறள். :        596   உள்ளுவது _  நினைப்பது   எல்லாம்.  _  யாவும்   உயர்வுள்ளல்  _ உயர்வாகவே நினைக்க   தள்ளினும்  _  கைகூடாவிடினும்   தள்ளாமை _ கைவிட்டுவிடக் கூடாது   நீர்த்து.  _ நீர்த்துப் போக விடாமல்,செயல்படுத்தாமல்   நாம் நினைப்பன எல்லாம் உயர்வானதாகவே இருக்கட்டும். நாம் நினைத்த உயர்வு கிட்டாமலேயே போனாலும் அதைக் கைவிட்டுவிடாது அந்த எண்ணத்தை நீர்த்துப் போகவிடாமல் இருத்தல் வேண்டும் . விளக்கம் :    நாம் நினைப்பதெல்லாம் எப்போதும்   உயர்ந்ததாகவே   இருக்கட்டும்.   அது கைகூடாமல் போகலாம். தப்பே இல்லை. ...

முயற்சியும் பயிற்சியும்

    முயற்சியும் பயிற்சியும் முயற்சியும் பயிற்சியும்  வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும் இரு வண்டிச் சக்கரம்  போன்றது.  இரண்டும் சீராக இயங்க வேண்டும்.  அப்போதுதான் வண்டி நிர்ணயிக்கப்பட்ட  இடத்தைச் சென்றடைய முடியும். முயற்சி செய்துவிட்டு பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால் அதனால் பயனில்லை. பயிற்சி செய்துவிட்டு அதை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் தானாக எந்த முன்னேற்றமும் வீட்டுக் கதவை வந்து தட்டாது. நம்மில் பலர்செய்யும் பெரிய தப்புகளுள் ஒன்று இதுதான். ஒன்றைக் கையில் எடுத்து மாங்குமாங்கென்று உழைப்போம். இன்னொரு புறத்தை எட்டிப் பார்ப்பதே இல்லை. அதனால் நமக்கு வர இருந்த வாய்ப்பு வராமலே போய்விடும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருந்தாள். இரவு பகலாக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிட்டு  வேலை வரும் வரும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். வேலைக்காக வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்கவில்லை. நன்றாக பயிற்சி செய்து வெற்றி கொண்டாள். அதற்கு மேற்பட்ட எந...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....

  மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி... " மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை   என்நோற்றான் கொல்எனும் சொல் "                                   குறள் :70 மகன் _ புதல்வன் தந்தைக்கு _ அப்பாவுக்கு ஆற்றும் _ செய்கின்ற  உதவி _  நன்மையான செயல்,கைமாறு இவன்தந்தை _ இவனது தகப்பனார் என்நோற்றான் _ என்ன நோன்பு செய்தான்  கொல் _  ஐயம்( இடைச்சொல் )  எனும் _  என்று கூறப்படும்  சொல் _   சொல்லும்படியான மொழி   மகன் தந்தைக்கு செய்யும் உதவி  யாதெனில் இவனுடைய பெற்றோர்   இப்படிப்பட்ட மகனைப் பெறுவதற்கு   என்ன தவம் செய்தனரோ என பெருமைப்படும் விதமாக இருத்தல் வேண்டும். விளக்கம்  :  மொத்தத்தில் பெற்றோரைப் பெருமைப்படுத்தும்  விதத்தில் பிள்ளைகள் இருத்தல் வேண்டும். இப்படி ஒரு பிள்ளை பிறப்பதற்கு கொடுத்து   வைத்திருக்க வேண்டும் என்றும் உலகம் மெச்சவேண்டும். என்ன புண்ணியம்  பண்ணினனோ நீ வந்து பிறந்திருக்கிறாய் என்று பெற்றோர் எண்...

சித்திரமும் கைப்பழக்கம்.....

    சித்திரமும் கைப்பழக்கம்.... ஒரு செயலை நாளும் செய்து வந்தால் நாளடைவில்  அது பழக்கமாகிப்  போகும். பழக்கம்  தொடர்ந்து நடைபெறுமானால் அது வழக்கமாகிவிடும். பழக்கம் வழக்கமாகி அதுவே பழக்கவழக்கமாகிவிடுகிறது. நல்லதோ கெட்டதோ எல்லாமே  பழக்கத்தால் வருவதுதாங்க... பழக்கம் என்றாலே பழகுதல் , பயிற்சி செய்தல் என்பதுதான் பொருள். எந்தச் செயலை செய்வதற்கும் பயிற்சி வேண்டும்.  பழக்கம் என்பது கற்றல்  என்றுதான் கொள்ள வேண்டும். பழக்க வழக்கம் நாளடைவில்  மரபாக கடைபிடிக்கப்பட்டு அதுவே ஒரு செயலாக மாறிவிடுகிறது. நமது கலாச்சாரம், மரபு எல்லாமே இவ்வாறு பழக்கவழக்கத்தினால் வந்தவைதான் என்று கூறுவார்கள். பழக்கம் இல்லாவிட்டால் எந்த செயலையும்  எளிதாகச் செய்ய முடியாது. பிறந்த கன்று எழும்பி நடக்க முயற்சி செய்யும். கால்கள் தடுமாறி கீழே விழும்.  எத்தனை முறை இடறினிலும் அது தனது முயற்சியை விட்டுவிடுவதில்லை. நடக்கும் வரை அதன் முயற்சி தொடரும். அதன் பின்னர் வழக்கமாக நடக்கத் தொடங்கிவிடும். சைக்கிள் ஓட்ட வேண்டுமா....? பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி  எடுத்துக் கொள்கிறோம...

அடுத்தது என்ன ?

        அடுத்தது என்ன ? இதுவும் கடந்துபோகும். ஆமாம் எல்லாமே கடந்து போகக் கூடியதுதான். நிரந்தரம் என்று எதுவும் இல்லை. மாற்றங்கள் நிகழ்வது இயல்பான ஒன்று. இரவு என்றால் பகல் வரும்.கோடைகாலம் வந்தால் பின்னாலேயே குளிர்காலமும்  வரத்தான் செய்யும். மழையும் வெயிலும் மாறி மாறி வந்து போகும். தொடர்ந்து மழை பெய்துகொண்டு  இருந்தாலும் தாங்காது. தொடர்ந்து வெயிலாக இருந்தால் கருகிப் போய்விடுவோம். ஒன்றிலிருந்து ஒன்று  மாறிக்கொண்டே இருப்பதால்தான் உலகம் இன்றளவும் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு  இருந்தால் மட்டுமே அடுத்தது என்ன என்ற ஒரு  எதிர்பார்ப்பு்  இருக்கும். மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது. மற்றவை யாவும் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டிருக்கும் உலகில் நாம் மட்டும் மாறாதிருந்தால் எப்படி? நாம் மாற வேண்டும். மாறித்தான் ஆக வேண்டும். நேற்று என் பெற்றோர் இப்படி இருந்தனர். முந்தாம்நாள் என் தாத்தா பாட்டி  அப்படி இருந்தனர். என்று பழைய பஞ்சாங்கம் பாடிக் கொண்டு இருந்தோமானால் நாமும் பழைய கால தாத்தாக்களைப்போல காதில் கடுக்கனும் க...

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்....

    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்.... பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்  "                          குறள்  : 505 பெருமைக்கும் _ சிறப்புக்கும் ஏனை _ மற்றும் சிறுமைக்கும் _குறைபாட்டிற்கும்,  தாழ்வுக்கும் தத்தம் _ அவரவர் கருமமே _ செய்கையே கட்டளை _ உரைகல் ஒருவருடைய சிறப்புக்கும் தாழ்வுக்கும் அவரவர் செய்கைகளே உரைகல்லாகும். விளக்கம் : உரைகல் என்பது தங்கத்தை உரசிப் பார்க்க பயன்படும் ஒருவித கல்லாகும். உலோகத்தின் தரத்தைக் கல்லில் உரசிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதுபோல ஒருவனுடைய தரத்தை அவனுடைய செயலை வைத்து அறிந்து கொள்ள முடியும். நமது உயர்வுக்கும் நமது தாழ்வுக்கும் நாம்தான் காரணம் என்கிறார் வள்ளுவர். நாம் பெருமைப்படுகிறோம் என்றால் அது நமது செயலால் மட்டுமே ஆகும். நமக்கு ஒரு சிறுமை வந்துவிட்டது என்றாலும் அதற்குக் காரணமாக இருப்பதும் நமது செய்கையால் மட்டுமின்றி வேறொன்றும் காரணமாக இருக்க முடியாது. எப்படி தங்கத்தின் தரத்தை உரைகல்லில் உரசிப் பார்த்து அறிய முடிகிறதோ அதுபோல ஒருவனுடைய தர...

செய்க பொருளை ...

      செய்க பொருளை.... " செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்  எஃகதனிற் கூரிய தில் "                                           குறள் : 759 செய்க _ ஈட்டுக பொருளை _  செல்வத்தை செறுநர் _  பகைவர் செறுக்கு _ ஆணவம், தருக்கு எஃகு _ கருவி வகைகளுள் ஒன்று  அதனின் _ அதுபோல கூரியது _ கூர்மையானது இல் _ இல்லை ஒருவன் கண்டிப்பாக பொருளை ஈட்ட வேண்டும். நம் பகைவரின் ஆணவத்தை அழிக்கக் கூடிய கூர்மையான ஆயுதம்  செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. விளக்கம் : ஒருவன் உலகத்தில் நன்றாக வாழ  வேண்டும் என்று விரும்பினால்  ஏராளமாக பொருள் ஈட்ட வேண்டும்.  பகைவரின் செருக்கை அறுக்க வல்ல கூரிய ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது பணம் ஒன்று மட்டுமன்றி வேறெதுவும் இருக்க முடியாது. பகைவருக்கு முன்னால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பணம் சம்பாதிப்பது  மட்டுமாக தான் இருக்கும்.  பணத்தால் மட்டுமே பகையை   வெல்ல முடியும். ஆகையினால் செய்க பொர...

இல்லானை இல்லாளும் வேண்டாள்....

    இல்லானை இல்லாளும் வேண்டாள்... "பணம் பத்தும் செய்யும்" " பணம் இல்லாதவன் பிணம்"  "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே  "   இப்படி பணமொழிகள் ஏராளம்.     இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல.  பணமில்லாமல் பட்டு ..பட்டு.. நொந்து நூலாகிப்  போனவர்கள்   கூறிய அனுபவ மொழிகள்.   பணம் இல்லாமல் என்ன செய்ய  முடியும் சொல்லுங்க... பள்ளிக்குப் போகணுமா பணம்... மருத்துவமனைக்குப் போகணுமா பணம்... தவித்த வாய்க்குத் தண்ணீர் வாங்கணுமா பணம்.... ஒருவாய் சோறு தின்னணுமா பணம்... திருமணத்தை நிச்சயிப்பது பணம்.... நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி வைப்பதும் பணம்... செத்தா பணம்.... செத்த பிணத்தைப் புதைக்கப்பணம்.... இடையில் எங்காவது பணமில்லாமல் எதுவும் நடைபெறுகிறதா என்று  நினைவுபடுத்திப் பார்த்தால்....  ம்ஹும்....பணமில்லாமல் ஒன்றையும் அசைக்க முடியாது. இதுதாங்க எதார்த்த நிலைமை. பட்டிமன்றத்தில் பேசுவதற்கு  வேண்டுமென்றால் "பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்தரம்" என்று  சொல்லிக் கொள்ளலாம். நிஜ வாழ்க்கையில் இது எல்லாம்  சாத்தியப்படாது. "பண...

செல்வத்துட் செல்வம்......

  செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்..... " செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்து ளெல்லாந் தலை. "                                               குறள். ,: 411  செல்வத்துட் செல்வம் _ செல்வங்கள்                                              எல்லாவற்றுள்ளும்  செவிச்செல்வம் _ கேள்விச் செல்வம்  அச்செல்வம் _ அந்தச் செல்வம்  செல்வத்துள் _ செல்வங்கள் என்று                                கூறப்படுவனவற்றுள்  எல்லாம் _  அனைத்திலும்   தலை _  முதன்மையானது.       ஒருவருக்கு சிறப்பான செல்வமானது செவியால் வரும் செல்வமாகும்.அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றுள்ளும்  முதன்மையான செல்வமாக  கருதப்படுகிறது. விளக...

மயங்கொலிகள்_ ல , ழ , ள

          மயங்கொலிகள்  _ல , ழ , ள ல , ழ , ள  இந்த மூன்று எழுத்துகளும் பேசும் போது  நிறைய குழப்பம் தருவதுண்டு. பொருள் மயக்கம் தரும் இந்த மூன்று எழுத்துகளையும் எழுதும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பே அதன் உச்சரிப்பில்தான் இருக்கிறது. சிறப்பு ழகரம் உள்ள சொற்களை  உச்சரிக்கும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறப்பு ழகரத்தை நாக்கை மடித்து உள்நோக்கி இழுத்து தொண்டையிலிருந்து உச்சரிக்கவேண்டும். அப்போதுதான் அதன் சிறப்பை  வெளிப்படுத்த முடியும். இப்போது லகர ளகரம் பிறக்கும் இடங்களைப் பார்ப்போம். ' ல 'என்ற எழுத்தை மேல் நோக்கிய   லகரம் என்று அழைக்கிறோம்.    இதனை ஒலிக்கும் போது நுனி நாக்கு  முன் பல் வரிசைக்கு மேல் உள்ள   அண்ணத்தைத் தொட்டு ஒலிக்க வேண்டும்.   ' ள 'என்ற எழுத்தை  கீழ் நோக்கிய ளகரம்  என்று அழைக்கிறோம்.    இவ்வெழுத்தை ஒலிக்கும்போது நாக்கு   மேலண்ணத்தின் மையப்பகுதியைத்  தொட்டு ஒலிக்க வேண்டும்.    எழுதும்போதும் பொருள் வே...

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்...

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்... " பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்  "                          குறள்  : 505 பெருமைக்கும் _ சிறப்புக்கும் ஏனை _ மற்றும் சிறுமைக்கும் _குறைபாட்டிற்கும் தத்தம் _ அவரவர் கருமமே _ செய்கையே கட்டளை _ உரைகல் ஒருவருடைய சிறப்புக்கும் தாழ்வுக்கும் அவரவர் செய்கைகளே உரைகல்லாகும். உரைகல் என்பது தங்கத்தை உரசிப் பார்க்க பயன்படும் ஒருவித கல்லாகும். உலோகத்தின் தரத்தைக் கல்லில் உரசிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதுபோல ஒருவனுடைய தரத்தை அவனுடைய செயலை வைத்து அறிந்து கொள்ள முடியும். நமது உயர்வுக்கும் நமது தாழ்வுக்கும் நாம்தான் காரணம் என்கிறார் வள்ளுவர். English couplet : "Of greatness and of meanness too the deeds of each touchstone true " Explanation : "A man's deeds are the touchstone of his greatness  and littleness" Transliteration : "Perumaikkum Enaich cirumaikkum thaththam Karaname kattalaik kal"

வேலொடு நின்றான்....

          வேலொடு நின்றான்..... "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு "                  குறள். :   552 வேலொடு _ (கையில்)ஆயுதத்தோடு நின்றான்  _ நின்றவன் இடு_ தா , கொடு என்றது _ கேட்டல் ,வேண்டுதல் போலும்  _ போன்றது கோலொடு _ ஆட்சி அதிகாரத்தோடு நின்றான் _  நிற்பவன் ,இருப்பவன் இரவு  _ வேண்டுதல் ஆட்சிக்குரிய கோலை ஏந்தி அரசாளும்  மன்னன் குடிமக்களிடம் பொருள் கேட்பது என்பது கையில் வேல் ஏந்தி வரும் கள்வன் தா என்று பொருளைப் பிடுங்கிச் செல்வதற்கு ஒப்பானதாகும். விளக்கம் :    ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மன்னன் குடிமக்களைக் கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்தல் கூடாது. இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் வழிப்பறி கொள்ளைக்குச் சமமாகும். கொள்ளையன்தான் கையில் இருப்பதை எல்லாம் கொடு என்று கத்தியையோ இல்லை பிற ஆயதங்களையோ காட்டி மிரட்டுவான். அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஒருபோதும் ஆட்சியாளர்கள் குடிமக்களுக்குக் கொடுத்தல் கூடாது. ஆட்சியாளர்கள் கொள்ளையர்களாக மாறிவிடக் கூடாத...

பொறாமை வேண்டாமே!

Image
          பொறாமை வேண்டாமே... "பொறாமையா.....எனக்கா...அது எங்கங்க கிடைக்கும்... "இப்படி சொல்கிற பருவம் குழந்தைப்பருவம். அதன்பிறகு பள்ளிக்குள் நுழைந்ததுமே உடன் பயிலும் மாணவர்மீது அப்பப்போ பொறாமைப்படும் சூழல் வந்துவிடும். நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன் கையில் இருந்தால் மெதுவாக பொறாமை வந்து எட்டிப் பார்க்கும். அதே போன்ற ஒன்று தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிக்க வைக்கும். வளர வளர பொறாமையும் கூடவே வளர்ந்து கொண்டு இருக்கும். பொறாமை உள்ளவர்கள் அடுத்தவர் படும் துன்பத்தைப் பார்த்து அதில் மகிழ்ச்சி கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள். நம்மிடம் இல்லாத  ஒன்று... நமக்கு கிடைக்காத ஒன்று... நாம் அடைய விரும்பும் ஒன்று... இன்னொருவரிடம் இருந்தால் ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு வந்து எட்டிப்பார்க்கும். அவரைப் பற்றித் தரக்குறைவாக பேச வைக்கும். அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி இன்பம் காணும். பார்த்தும் பார்க்காததுபோல போக வைக்கும். முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்க...