நோவற்க நொந்தது அறியார்க்கு.... "நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து" குறள் : 877 நோவற்க - துன்பத்தைச் சொல்லாதிருப்பீராக நொந்தது - துன்பப்பட்டது,வருந்தியது அறியார்க்கு- தெரியாதவர்க்கு மேவற்க- பொருந்தாதிருப்பீராக மென்மை - வலியின்மை பகைவர்- எதிரிகள் அகத்து- உணரும்படியாக துன்பம் அறியா நண்பர்களிடம் துன்பத்தைப்பற்றிச் சொல்லக்கூடாது. நம் பலவீனத்தைப் பகைவர் உணரும்படி நடந்து கொள்ளக்கூடாது. விளக்கம் : துன்பத்தைப் பற்றி அறியாதவனிடம் நம் துன்பத்தைப் பற்றிப் பேசினால் அவனுக்கு அந்தத் துன்பத்தின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. பசியே அறியாதவனிடம் பசியைப் பற்றிப் பேசினால் பசியின் கொடுமையை அவனால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? பட்டவனுக்குத்தான் தெரியும் நோவும் அதனால் ஏற்படும் மன உளைச்சலும் வலியும். துன்பம் என்பதைச் சரியா...
அம்மா நீ எனக்கு வேண்டும் அம்மா நீ எனக்கு வேண்டும் அனுதினமும் உன் தோளில் சாய்ந்து ஆறுதல் நான் அடைந்திட வேண்டும். அம்மா உன் அன்பு வேண்டும் நீ மட்டுமே எனக்குவேண்டும் உன் மடியில் சாய்ந்து வானிலவை அழைத்திட வேண்டும் கண்சிமிட்டும் தாரகையோடு கதை ஆயிரம் பேசிட வேண்டும் உன் முகம் பார்த்து ஊர்க்கதைகள் பேசிட வேண்டும் உன் மார்பில் சாய்ந்து உலகமெல்லாம் சுற்றிட வேண்டும் உன் கையால் என் தலையை மெல்ல நீ கோதிட வேண்டும் பெத்தவள் நீ எனக்கு பேரு சொல்லித் தர வேண்டும் பொய்யான வார்த்தை பேசி நெய்ச்சோறு ஊட்ட வேண்டும் நித்தம் நித்தம் உன் மடியில் தலை சாய்த்து கிடந்திட வேண்டும் சத்தமில்லா முத்தம் தந்து கன்னத்தை கன்னிட வைத்தல் வேண்டும் முற்றம் எங்கும் உன்னோடு குறுநடை நடந்திட வேண்டும் சோர்வு வந்திடும்போதும் துயரங்கள் துரத்தும்போதும் அம்மா உன் தோள் எனக்கு ஆறுதலாய் இருந்திடல் வேண்டும் விரல்களால் நம்பிக்கை வார்த்தை என் முதுகில் நீ எழுதிட வேண்டும் வீதிவீதியாய் அம்மா உன் கரம் பற்றி ஆனந்த நடை போட வேண்டும் அம்மா நீ எனக்கு வேண்டும்...
பயணங்கள் முடிவதில்லை செல்லடுவு அந்த வட்டாரத்தில் பிரபலமான பெண். எந்த ஊரில் திருவிழா என்றாலும் டாண் என்று முதல் ஆளாக வந்து நிற்பாள். திருவிழா என்றாலே வீட்டுக்கு வீடு செல்லடுவு வந்தாளா? செல்லடுவு வந்தாளா? என்ற கேள்விதான் அடிக்கடி கேட்கும். " செல்லடுவுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா?... செல்லடுவுக்கு காப்பி கொடுத்தீர்களா? " கேட்ட பின்னர்தான் எல்லா வீட்டிலும் உள்ள ஆண்களும் சாப்பிடவே உட்காருவர். அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார் செல்லடுவு. வீட்டுக்கு வீடு ஓடி ஓடி வேலை செய்வாள். ஒரு வீட்டுல வேலை செய்தாயிற்றே சற்று ஓய்வெடுப்போம் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. "கீழத்தெரு அண்ணன் வீட்டில் கூப்பிட்டாகள... .வடக்குத...
Comments
Post a Comment