பினாங்கு மாப்பிள்ளை
பினாங்கு மாப்பிள்ளை கண்ணம்மோ ... கண்ணம்மோ... மூச்சிரைக்க கண்ணம்ம வீட்டு வாசலில் வந்து நின்றான் முத்துசாமி. "ஏல...என்ன இந்த ஓட்டம் ஓடியார... என்னமும் அவசரமா?" "அம்மதான் உங்கள் கையோட கூட்டிவரச் சொன்னாவ" "இந்தா வாரேன்னு சொல்லு" "வாங்க... உடனே வரணுமாம்" "அப்படி என்ன தல போற அவசரம்" "வாயேன்....நேரதாத போக்கிட்டு எங்க பசு கூட்டிப் போடப்போவுது... அதுதான் அம்ம கூப்பிட்டாவ..." கையைப்பிடித்து இழுத்தான் முத்துசாமி. கூடவே போனார் கண்ணம்ம. இப்படி நாளும் கண்ணம்மயை தேடி யாராவது வந்துவிடுவர். மாட்டுக்கு ஒண்ணுன்னாலும் மனுசனுக்கு ஒண்ணுன்னாலும் கூப்பிடுங்க கண்ணம்மய என்பார்கள். கண்ணம்மாவைத் தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது. அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி உதவும் குணம். ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது கண்ணம்ம மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மயத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும் கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும். கண்ண...