உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்.....
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்.... உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்" குறள்: 473 உடைத்தம் -தம்மிடம் இருக்கக்கூடிய வலி - வலிமை அறியார் - அறியாதவர் ஊக்கத்தின் - ஆர்வ மிகுதியால் ஊக்கி- செயலைத் தொடங்கி இடைக்கண்-இடையிலேயே முரிந்தார் -அழிந்தார், நொடிந்தார் பலர்-பலராவர் தமது வலிமை இவ்வளவுதான் என்பது அறியாமல் ஆர்வ மிகுதியால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கி ,இடையிலேயே அதை முடிக்க முடியாமல் அழிந்து போனவர் பலர் விளக்கம் : நம்மிடம் இருக்கும் ஆற்றல் எவ்வளவு என்பது நமக்கு மட்டுமே தெரியும். எனினும் பல நேரங்களில் அதனைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் ஆர்வம் மேலிட ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிடுவோம். தொடர்ந்து அந்தச் செயலைச் செய்யத் தெரியாமல் தடுமாற்றம் வந்துவிடும். தொடங்கியபோது இருந்த ஆர்வம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வரும். அடுத்தது என்ன என்ற கேள்வி எழும்போது விடை தெரியாது விழிப்போம். இனி என்ன செய்வது...