Posts

Showing posts with the label வாசுகிக்காக வள்ளுவர் எழுதிய நான்கு வரிகள்

திருவள்ளுவர் எழுதிய நான்குவரி பாடல்

Image
திருவள்ளுவர் எழுதிய நான்குவரி பாடல்  திருவள்ளுவர் என்றதும் நம் கண்முன் வந்து நிற்பது ஒன்றை முக்கால் அடி கொண்ட திருக்குறள் என்பது நம் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏழு சொற்கள் கொண்டது. எந்த இடத்திலும் குறள் வெண்பாவுக்கான இலக்கண மரபை உடைக்காத சொல்லாட்சித் திறன். பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட வரிகள். அதிகார அமைப்பிலும் பகுப்பிலும் ஓர் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்ட அமைப்பு. இப்படி வரம்புமீறாக் கவி படைத்துத் தந்த வள்ளுவர் தன் இலக்கண வரம்பைத்  தாண்டி நாலுவரிகளில் ஒரு பாடல் எழுதி வைத்துள்ளார். திருவள்ளுவர் நாலுவரியில் பாடல் எழுதியுள்ளாரா? ஆச்சரியமாக  இருக்கிறதல்லவா! அந்த நாலு வரியும் யாருக்காக எழுதப்பட்டது என அறிந்தால்.... அதிர்ந்து போவீர்கள். தன் காதல் மனைவி வாசுகிக்காக எழுதிய பாடல்தான் நான்கு வரிகள் கொண்டது. வள்ளுவர் தன் மனைவி வாசுகி  இறந்ததும் மனம் உடைந்து போனார். நேற்றுவரை பார்த்து பார்த்து சமைத்துத் தந்தவள். ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாதவள். தூங்கும்வரை தூங்காமல் இருந்து, கண் விழிக்கும் முன்னர் முன் வந்து நின்று பணிவிடை செய்தவள். இல்லாள் அகத்திருக்க இல...