Posts

Showing posts with the label யானறிந்த புலவரிலே(பாரதி)-பேச்சுப் போட்டி

யானறிந்த புலவரிலே(பேச்சுப் போட்டி)

Image
யானறிந்த புலவரிலே(பேச்சுப் போட்டி)  நடுநிலை தவறாது வாய்ச்சொல் வழுவாது மனுநீதி காக்கும் மன்னனாய் மையத்தில் அமர்ந்திருக்கும் நடுவர் அவர்களே! விழுதுகளாய்த் தாங்கி நிற்கும் பேச்சாளர் பெருமக்களே!  செந்தமிழ் தேனுண்ண வந்திருக்கும்  அருமை மாணவத் தங்கங்களே!  உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழுக்கு நற்சான்றிதழ் தந்தவர் பாரதி. எட்டயபுரத்தில் பிறந்து எல்லை தாண்டி வந்து தொல்லை தந்த ஆங்கிலேயரை எதிர்த்துக் கவி பாடி விடுதலை வேட்கையைத் தூண்டியவர்   பாரதி. பாரதியின் கவிதையில் வாசிக்க வாசிக்க உற்சாகம்  பொங்கும். உள்ளுக்குள் ஒர் உந்து சக்தி  வந்து உந்தி  முன்னே தள்ளும். துள்ளல் இருக்கும் . துவண்டு நின்ற வேளையில் தோள் கொடுத்துத் தூக்கிவிட  தன்னம்பிக்கை வரிகள் தந்து தாங்கி நிற்கும். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாப்பாவுக்குப் பாட்டு எழுதிய பாரதிய அத்தோடு தன் ஓட்டத்தை நிறுத்திவிட வில்லை. எல்லாத் தரப்பு...