Posts

Showing posts with the label வானரம் மழைதனில் நனைய -விவேகசிந்தாமணி

வானரம் மழைதனில் நனைய...

வானரம் மழைதனில் நனைய... காட்டில் மிகுதியான மழை .  ஒரு தூக்கணாங்குருவி தன் கூட்டில் பத்திரமாக இருந்தபடி வெளியில் எட்டிப்பார்த்தது. கீழே ஒரு குரங்கு மழையில் நனைந்தபடி வெடவெடத்துப் போய் இருந்தது. தூக்கணாங்குருவிக்கு குரங்கு மீது பரிதாபம் உண்டாயிற்று. உடனே, "குரங்கண்ணே!குரங்கண்ணே! ஏன்  மழையில் நனைந்து கொண்டிருக்கிறீர்கள் ? என்னைப் பாருங்கள்  நான் உங்களைவிட சிறிய பறவை. எவ்வளவு பாதுகாப்பான கூடுகட்டி மழையில் நனையாமல் இருக்கிறேன்!. நீங்களும்  கூடுகட்டி இருந்தால் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்கலாம் அல்லவா?"என்றது. உடனே குரங்குக்கு ஒரே கோபம். என்னை சோம்பேறி என்கிறாயா என்றபடி விடுவிடுவென மரத்தில் ஏறியது. படபடவெனக் கூட்டைப் பிய்த்து வீசிவிட்டு கடகடவெனக் கீழே இறங்கிப் போய்விட்டது. நல்லது சொன்ன தூக்கணாங்குருவி இப்போது மழையில் நடுங்கிக் கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. அதேபோல  ஒருநாள் காட்டு வழியாக ஒரு பெரியவர் கையில் ஒரு இசைக்கருவியை வைத்துக்கொண்டு  பாடல் பாடியபடி வந்து கொண்டிருந்தார்.  ஒரு கள்வன் ஒருவன் எதிரில் வருவதைப் பார்த்தார். தம்பி,  என்று அழைத்தார். "...