Posts

Showing posts with the label நீட் தேர்வு கலங்கும் சாமானியன்

நீட் தேர்வு : கலங்கும் சாமானியன்

நீட் தேர்வு  : கலங்கும் சாமானியன் நீட்டைப்பற்றி நீட்டி அறிக்கை விடாத அரசியல்வாதிகள் இல்லை. நீட்டை எண்ணி கலங்காத  மாணவர் இல்லை. "இந்த வருடமாவது என் பிள்ளை நீட்டில் தேறுவானா ?" கலங்காத  பெற்றோர் இல்லை. "நீட் தேர்வுக்காகப் படித்துக் கொள்ளலாம்"  என்று பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் இல்லை அப்படியானால் அந்த இரண்டாண்டு கல்வி எதற்கு என்ற கேள்வி நம்முன் எழுகிறது. அது மருத்துவம் தவிர வேறு படிப்புகளுக்குத் தேவையாக உள்ளதே என்ற பதில் வரலாம். மற்ற எல்லா படிப்பிற்கும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் வேண்டுமாம்... மருத்துவத்திற்கு மட்டும் தேவை இல்லையாம்...வேடிக்கையாக இல்லை. ஏன் இந்த முரண்பாடு.. கல்வி என்றால் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு  ஏற்பட வாய்ப்பளித்தல் கூடாது... இதுதானே நமது கல்வி கொள்கை. அப்படி இருக்கும்போது மருத்துவ  மாணவர்களைப் பிரித்துப் பார்க்கும் மனநிலை  எங்கு தோன்றியது? இப்படி ஒரு தேர்வு வைத்துதான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முன்மொழிந்தவர் யார் ? முன்மொழிய...