Posts
Showing posts with the label பிறந்தநாள் வாழ்த்து -கவிதை
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து தத்தை மொழி கற்றலா(ல்) ஒற்றைச் சொல்லில்- கைபேசி ஓயாது பிறந்தநாள் வாழ்த்துப் பாடலா! மிஞ்சும் அன்பு நின்மொழியிலா விஞ்சும் மதியிலா பேச்சிலா கஞ்சமில்லா அன்பு பாராட்டலிலா! கரையிலா நட்பு பேணலா(ல்) -என்றும் கறையிலா உள்ளம் நினதாதலா வரையிலா அன்பு அரசாட்சி நடத்தலா! கண்டுலா வந்திட விழைதலா(ல்) கவியோலை ஏந்தி ஐயாவின் இல்லம் வந்தேன் இன்பச் சிற்றுலா! வானும் நிலனும் போல வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு இன்றுபோல என்றும் உவந்து! - செல்வபாய் ஜெயராஜ் 🎈🎈🎈🎈🎈
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து பணி முதல்நாள் மாதுங்கா பள்ளியில் மலங்க மலங்க நான் விழிக்க பாசமாய் இரு விழிகள் எனை நோக்க இதழ் விரிந்தும் விரியாமலும் உதடுகள் புன்னகை பூக்க 'என்னம்மா' என்று ஹெலன் டீச்சர் அழைத்தபோது மலர்ந்த இந்த முதல் காதல் என்றென்றும் வாடாமலராய் இன்றுவரை தொடர்வதை நினைக்கையில் கண்கள் பனிக்க உள்ளம் உவக்க சொற்கள் தொண்டைக்குள் சிக்க ஊமையாய் நின்றிருந்த நாட்கள் நினைவில் ஓட வந்ததிந்தப் பிறந்தநாள் வாழ்த்துரைக்க உள்ளம் உந்த ஓரிரு சொல்லெடுத்து அன்பெனும் நார்தொடுத்து பாவணி புனைந்து தாரணி சூட்டி அணியம் செய்ய ஆவலாய் நானும் வந்தேன் கொஞ்சும் நலம் கொண்டு நெஞ்சம் விழைவன கண்டு கஞ்சமில்லா அன்பைப் பொழிந்து தஞ்சம் இறையென மகிழ்ந்து நுவலவொண்ணா நலங்களை நுகர்ந்து வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்று போல என்றென்றும் என் உள்ளத்தில் நிறைந்து! -செல்வபாய் ஜெயராஜ்
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து கீழ் வானம் சிவக்க சாளரம் மெல்லத் திறக்க சாய்ந்தாடு மரக்கிளை ஒதுங்க செங்கதிரோன் ஆசிரியர் வீட்டில் மெல்லஅத்துமீறல் நடத்த செவிமடலைச் செந்தமிழ் சொற்கள் தழுவி நடமாட பிறந்தநாள் வாழ்த்துப்பாட தராணியோடு பாவணி சூட்டி மகிழ்வோம் வாரீரென பட்சியொன்று காதோரம் கவிபாட சில்லென்று முகம் சிலிர்க்க செவ்விதழ் மெல்லத் திறக்க கண்கள் இதழுக்குத் தடையிட்டு கவின்மொழி பேசி நிற்க சுற்றம் சுற்றி நின்று வாழ்த்துரைக்க விஞ்சும் மதி யுண்டு மிஞ்சும் மகிழ் வுண்டு கொஞ்சும் நலம் கொண்டு நெஞ்சம் விழைவன கண்டு வாழ்வீரென யானும் வாழ்த்துரைத்து மகிழ்கிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு எம் உள்ளங்களை ஆண்டு!
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து பால்நிலா வானுலா வந்து பிறந்தநாள் வாழ்த்துப் பாடலா கைபேசி கலகலவெனச் சிரித்து ஒற்றைச் சொல்லால் ஓயா இசையில் நனைத்தலா இறையருள் இல்லம் நிறைத்தலால் இன்பம் நிரந்தர குடியுரிமை வாங்கலா நலமும் வளமும் கூட்டாட்சி நடத்தலால் நிலைத்த புகழ் உனக்குரித்தாதலா கண்டுலா வந்திட விழைதலால் என்றன் வாழ்த்துலா வந்தது இன்பச் சிற்றுலா வாழ்க...பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வளர்பிறையன்ன வளர்நிலை கண்டு!
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து ஆசிரியருள் மாணிக்கமாய் அனைவரின் அன்புக்குரியோனாய் மாணவரின் கனவு நாயகனாய் மாண்புநிறை பேரறம் கொண்டோனாய் மட்டில்லா மொழியறிவாளனாய் தெற்றில்லா தமிழ்க்களனாய் வெற்றுமொழி பேசா ஞானியாய் தேய்வில்லா மதியாளராளராய் அறப்பணியொடு அருட்பணியாற்றும் அய்யா ஜெபமணிக்கு வாழ்த்துரைக்க கற்றோரும் ஆன்மீக பெரியோரும் காலை முதல் காத்திருக்க வெற்றுக் கவியொன்று புனைந்து நெஞ்சில் அன்பைச் சுமந்து வாழ்த்துகிறேன்! நெடும்புனல் நன்னீர் தரு இனிமை நாளும் நுகர்ந்து வானும் நிலனும்போல வாழ்ந்தின்பம் காண்பீர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு எம் உள்ளங்களை ஆண்டு!
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து விண்மீன்கள் ஒளிசிந்த விடிந்ததொரு பொன்னாளென வீசுஇளம் தென்றல் வந்து எடிசன் ஐயா காதோடு கவிபாட விசும்பின் வீழ்த் துளியென விடை காணா நாள்கள் வாழ்ந்தின்பம் காண்கவென வான்மழையும் வாழ்த்துரைக்க கிண்கிணியெனக் கைபேசியும் அணிவகுத்து நின்று அணிசெய் நாயகனுக்கு அணியம்செய் மொழியெடுத்து அழகாய் வாழ்த்தி நிற்க ஓய்விற்குப் பிறகும் ஓய்ந்திராது ஓய்ந்தவரென்று எம்மையும் ஒதுக்கிடாது ஓரணியில் ஒருங்கிணைத்து ஓடி வந்து உதவி வரும் உயர்ந்த உள்ளம் பேருள்ளம் பெருமிதத்திற்குரிய உள்ளம் நெடுவரையன்ன நிலைத்த புகழடைந்து தொடர்பணி தொய்வில்லாது செய்துவர இறையருள் என்றென்றும் இல்லம் தங்கிட இருகரம்கூப்பி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு ... பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து !
பிறந்தநாள் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
பிறந்தநாள் வாழ்த்து சில்லென்று பூத்த செந்தாரையன்ன புன்சிரிப்போ! செந்தமிழ் கொஞ்சி விளையாடு பூங்காற்றன்ன நாவசைப்போ! அமைதி குடியமர்த்தி அழகு பார்க்குமிடம் கனிமொழியோ எல்லை வகுத்திடா வான்வெளிதான் நின் மதியோ! கண்டிட கையில் வாழ்த்து மடலொன்று சுமந்து கட்செவி அஞ்சலேறி வந்தேன் வாழ்க ...பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு எம் உள்ளங்களில் நிரந்தரக் குடியுரிமை கொண்டு !