Posts

Showing posts with the label இலக்கணம்

இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி செய்யுளின் சொல்லழகு,பொருளழகு ஆகியவற்றை மெருகூட்டித் தருவதற்காக கவிஞர்கள் அணியிலக்கணத்தை இடத்திற்கு ஏற்ப கையாளுவர். சொல்லப்படும் பொருள் தெளிவாகப் புரிய வேண்டும். செய்யுள் அழகும் குறைந்துவிடக்கூடாது. அதற்காக அணிகலன்களை அணிவிப்பதுபோல அணிகளை அணிவித்து பாடல்கள் எழுதும் பாங்கு எல்லா புலவர்களிடமும் உண்டு. அணிகளுள் அணிசெய் அணியாக விளங்கும் இல்பொருள் உவமையணி பற்றி இக்கட்டுரையில் காண்போம். இல்லாத ஒன்றை இருப்பதுபோல கற்பனை செய்து அதனை உவமையாக கூறுவது இல்பொருள் உவமையணி எனப்படும் அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல்மரம் துளிர்த் தற்று என்கிறார் வள்ளுவர். கொடும்பாலை நிலத்தில் பட்டுப்போன ஒரு மரமானது தளிர் விடுவது என்பது அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. கொடிய பாலைநிலம். நெடு நாட்களாக மழைகாணா பூமி. அங்கங்கே நின்றுகொண்டிருந்த ஒற்றை மரமும் பட்டுப் போய்விட்டது மரம் பட்டது பட்டதுதான். எங்கேயாவது பட்டுப்போன மரம் துளிர்த்து மறுபடியும் காய் ,கனி என்று பழைய நிலைக்குத் திரும்புவதை கண்டீரோ? இல்லை அல்லவா! இது எப்படி நடைபெறுவது சாத்தியம...

பெயரெச்சம் என்றால் என்ன?

பெயரெச்சம் என்றால் என்ன? முற்று பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும். எடுத்துக்காட்டு: வந்த மாணவன். படித்த பையன். ஓடிய குதிரை பாடிய குயில். வாழ்ந்த வீடு. ஓடிய குதிரை ஓடிய  என்பது முற்றுபெறாத வினைச்சொல். குதிரை  - பெயர்ச்சொல் இப்படி முற்றுபெறாத வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும். இப்போது உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம். அது என்ன பெயரெச்சம்? எச்சம் என்றால் முற்றுபெறாத சொல். இங்கே முற்றுபெறாத சொல் ஓடிய என்ற வினைச்சொல். அப்படியானால் வினையெச்சம்  என்றுதானே எழுத வேண்டும் அது எப்படி பெயரெச்சமாகும்? என்று உங்களுக்குள் ஒரு சிறு ஐயப்பாடு எழலாம். நான் படிக்கும் காலத்தில் அப்படி எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. அதனால்தான் இந்தக் கேள்வியை  இங்கே உங்கள் முன் வைக்கிறேன். இங்கு நாம் குறிப்பிடுவது குதிரையைத்தான். அதனால் குதிரை என்ற பெயர்ச்சொல்தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதனால்தான் ஓடிய குதிரை என்பது  பெயரெச்சம்.  இப்படி நானாகவே விளங்கிக் கொண்டேன். இப்படியே நீங்களும் மனதில் பதிய  வைத்துக் கொள்ளுங்கள். ...

வஞ்சகப் புகழ்ச்சி அணி

வஞ்சகப் புகழ்ச்சி அணி புகழ்ச்சி தெரியும். இது என்ன...வஞ்சகப் புகழ்ச்சி! ஏதோ நெருடலாக இருக்கிறதே. வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவரால் புகழ்ந்து பேச முடியுமா ?  பேச முடியும். நயவஞ்சகம் பற்றி தெரியுமல்லவா! நயமாகப் பேசி நம்மை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் இல்லையா? இந்த நயவஞ்சகத்திற்கும் வஞ்சகப்புகழ்ச்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லைங்க. ஒருவரைப்   புகழ்வது போல பழிப்பது. பழிப்பது போல புகழ்வது. அதாவது எள்ளல். ஒருவரை எள்ளி நகையாடுவது பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குக் கைவந்த கலைதான். அதுவும்  அவர்களுக்கு வலிக்காதபடி பேசுவது ...ஒருவகையில் பொடி வைத்துப் பேசுவது என்றே வைத்துக் கொள்வோம். பேசுபவர் பேசிவிடுவார். மேலோட்டமாக பார்த்தால்  பொருள் இருக்கும். உடனே நமக்குப் புரியாது. நாமும் சேர்ந்து சிரிப்போம். வீட்டிற்கு வந்த பின்னர்தான் எங்கோ பொறியில் தட்டுவதுபோல  இருக்கும். அவன் என்னை நக்கலடித்திருக்கிறான். நானும் முட்டாள் மாதிரி சிரித்துவிட்டு  வந்திருக்கிறேனே என்று நம்மையே நொந்து கொள்வோம்.  இது நம்மில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகத்தான் இருந்திருக்கும். இதைத்தான் வஞ்சகப் ப...

உவமை அணி

        உவமை அணி அணி இல்லாத கவிதை மணி இல்லாத மாலை போன்றது. கவிதையின் அழகுக்கு அழகு சேர்ப்பது அணி இலக்கணம். அழகோடு மட்டுமல்லாமல் சொல்ல வந்த கருத்தை எளிதாக புரிய வைப்பதற்காகவும் செய்யுளில் உவமை கையாளப்படுதல் உண்டு. அணி இலக்கணத்தில் முதன்மையான அணி உவமை அணியாகும். ஒரு பொருளை விளக்குவதற்காக அதனோடு ஒப்புமை உடைய இன்னொரு பொருளை உவமையாகக் கூறி விளங்க வைப்பதை உவமை அணி  என்கிறோம். உவமை நாம் அன்றாடம் கேட்ட சொற்களாகத்தான் இருக்கும். "ஆஹா.....இந்த மாம்பழம் தேன் போல  இனிக்கிறது "என்று சொல்லிச் சொல்லி  சுவைத்திருப்போம். ஏதாவது மருந்தைப் குடிக்கும்போது "பாகற்காய் போல கசக்கிறது "என்று சொல்லி குடிக்க மறுத்திருப்போம். "நீர் அருவி போல கொட்டியது" என்று சொல்லக் கேட்டிருப்போம் . "ஒத்த பிள்ளை என்று கறிவேப்பிலை  கண்ணுபோல வளர்த்தேன் "என்று அம்மாக்கள்  சொல்லுவதைக் கேட்டிருப்போம். "பிள்ளை என்றால் பக்கத்து வீட்டு   ரவி போல இருக்கணும்.நீயும் இருக்கியே...." என்று அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். "அந்தப் பெண்ணுக்குப்  பூப்போல மனசு " என்று  சொல்லியிருப்...

மோனை வகைகள்

    மோனை வகைகள் "அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை " என்கிறது தொல்காப்பியம். அதாவது முதல் எழுத்து ஒன்றிவர  தொடுப்பது மோனை எனப்படும். இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாக வருதலும் உண்டு. இன எழுத்துகளில் உயிர் எழுத்துக்களுக்கு மூன்று இனங்களும் மெய் எழுத்துக்களுக்கு மூன்று இனங்களும் உண்டு. உயிரெழுத்து இனங்களாவன: 1.  அ , ஆ , ஐ , ஔ 2. இ , ஈ , எ , ஏ ,யா 3  . உ , ஊ , ஒ , ஓ  மெய்யெழுத்து இனங்களாவன :  1  . ஞ் , ந்  2 .  ம்  , வ்  3 . த் , ச்  இனி மோனை வகைகளைப் பார்ப்போம். மோனை இரண்டு வகைப்படும். 1 . அடி மோனை 2. சீர் மோனை  அடிமோனை :  பாடலின் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த அடிகளின் முதல் எழுத்தாக  வருவது அடிமோனை எனப்படும். " த ன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்   த ன்னெஞ்சே தன்னைச் சுடும் " இக்குறளில் உள்ள இரண்டு அடிகளிலும் முதல் எழுத்து ' த 'என ஒன்றுபோல் வந்திருப்பதால் இது அடிமோனையாகும். சீர்மோனை :  ஓர் அடியிலுள்ள சீர்களின் முதல்  எழுத்து அனைத்தும் ஒன்றி வருவது  சீர் மோனை எனப்படும். " க ற்க ...

பல, சில என்பவற்றின் புணர்ச்சி விதி

  பல ,சில என்பவற்றின் புணர்ச்சி விதி பல நேரங்களில்  சில  இடங்களில்  பல மற்றும் சில ஆகிய சொற்களை எழுதும்போது வல்லினம் மிகுமா ?மிகாதா...? என்ற ஒரு குழப்பம் ஏற்படலாம். அதற்கான தீர்வாக நன்னூலார், " பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பும் மிகலும் அகரம் ஏக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலும் உளபிற "  என்று எழுதியுள்ளார். பல,  சில என்னும் சொற்களுக்கு முன்  அதே சொற்கள் வந்து புணரும்போது இயல்பாக அப்படியே வருதல் உண்டு. எடுத்துக்காட்டு: பல + பல  = பலபல சில  + சில = சிலசில வல்லினம் மிகுந்து வருதலும் உண்டு. எடுத்துக்காட்டு :  பல  + பல  = பலப்பல  சில  + சில  = சிலச்சில லகரம் றகரம் ஆதலும் என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் கெட லகரம் றகரமாகி வருதலும் உண்டு. எடுத்துக்காட்டு : பல  + பல  = பற்பல சில  + சில  = சிற்சில இப்போது மூன்று வழிகளில் அவை  எழுதப்படலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்திருக்கும்.  பல மற்றும் சில ஆகிய  சொற்களின் பின் வேறு சொற்கள்  வந்தால் இயல்பாகவும் புணரு...

குற்றியலுகரம்

            குற்றியலுகரம் உகரம்  ஒரு மாத்திரை உடையது.  ஒரு மாத்திரை அளவு குறைந்து  ஒலிக்கும் இடங்களும் உண்டு.   அவ்வாறு உகரம் தன் மாத்திரை அளவில்  குறைந்து ஒலிக்கும் போது  குற்றியலுகரம் என்று அழைக்கப்படும். குறுமை + இயல் + உகரம்  = குற்றியலுகரம் வல்லின மெய்யோடு சேர்ந்த உகரம் சொல்லின் கடைசி எழுத்தாக வரும் போது தன் மாத்திரை அளவான ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலித்தால் அது குற்றியலுகரமாகும். கு, சு , டு , து , பு , று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே குற்றியலுகர எழுத்துகளாக வரும். குற்றியலுகரத்தின் வகைகள் : குற்றியலுகரம் ஆறு வகைப்படும். 1.நெடில் தொடர்க் குற்றியலுகரம் 2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் 3. உயிர்த் தொடர் குற்றியலுகரம் 4. வன்தொடர்க் குற்றியலுகரம் 5. மென்தொடர்க் குற்றியலுகரம் 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பனவாகும்.  1 . நெடில் தொடர் குற்றியலுகரம் :  தனியாக வரும் நெடில் எழுத்துகளை அடுத்து குற்றியலுகர எழுத்துகளான கு ,சு, டு , து , பு  ,று  என்ற எழுத்தில் ஏதாவது ஒன்று வந்தால்...

முற்றியலுகரம்

  முற்றியலுகரம் என்றால் என்ன? உயிர்க்குறில் எழுத்துகளான அ, இ, ,உ,  எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் ஒரு மாத்திரை  அளவு ஒலிப்பன.  இந்த உகரம் தனக்குரிய ஒரு மாத்திரை   அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதைக்   குற்றியலுகரம் என்கிறோம்.     வல்லின மெய்யோடு சேர்ந்து வரும்   கு, சு ,டு , து, பு , று என்ற எழுத்துகள்   மட்டுமே  குற்றியலுகர எழுத்தாக வரும்.      கு , சு  , டு  ,  து  , பு  ,  று என்னும்    எழுத்துகள் தனிக்குறிலை அடுத்து வருமானால்   அதன்  ஓசை  அளவு குறைவதில்லை.   அவ்வாறு தன் ஓசை அளவு குறையாது   வரும் எழுத்துகள் முற்றியலுகரம்   எனப்படும்.       நகு       பசு       தடு       எது       மறு          இதில் வரும் உகர எழுத்துகள் தனிக்குறிலை    அடுத்து வருவதால் இது   தன் மாத்திரை அளவில் குறைந்து   வரவில்லை.      மெல...

ஆசிரியப்பா வகைகள்

                   ஆசிரியப்பா வகைகள் நான்கு வகைப் பாக்கள் உண்டு. 1. வெண்பா 2. ஆசிரியப்பா 3. வஞ்சிப்பா 4. கலிப்பா நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.                           ஆசிரியப்பா இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாக உள்ள ஒரு பா வகை என்றால் அது ஆசிரியப்பாகும்.ஆசிரியப்பாவில் கவிபாடுவது மிக எளிது. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்: அடிதோறும் நாற்சீர்களைப் பெற்றிருக்கும். இடையிடையே குறளடி, சிந்தடிகள் வருதல் உண்டு. ஆனால் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும். அதாவது நான்கு சீர்கள் கொண்டவையாக இருக்கும்.   ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவல் ஓசை.                      அகவல் என்பது அழைத்தல்  என்னும் பொருள் உடையது. ஒவ்வோர் அடியும் தனித்தனியே  அழைக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் அகவல்  என்பதற்கான காரணம். ஆசிரியற்பாவினை அகவற்பா என்றும் அழைப்பர். முதலாவது ஆசிரியப்பாவில் சீர் எப்படி அமைந...

வெண்பா வகைகள்

  வெண்பா வகைகள் செய்யுள்கள் அல்லது பாக்கள்  அவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையின் அடிப்படையில் வெவ்வேறுவிதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன.ஓசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன.     பா வகைகள்: பாவகைகள் ஐவகைப்படும். அவை :        செப்பலோசையை உடைய வெண்பா        அகவலோசையை உடைய ஆசிரியப்பா        துள்ளலோசையை உடைய கலிப்பா        தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா        வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா என்பனவாம்.                          வெண்பா : வெண்பாவிற்கான ஓசை செப்பலோசையாகும். செப்பல் என்றால்  செப்புதல், உரைத்தல் , விடை கூறுதல் எனப்படும்.        வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற ஓசை இ...

வல்லினம் மிகா இடங்கள்

  வல்லினம் மிகா இடங்கள் இரண்டு சொற்கள் சேரும்போது    நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி   முதல் எழுத்தும் எந்தெந்த எழுத்துகள்  இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்   என்பதை புணர்ச்சி இலக்கணத்தில் படிக்கலாம்.    இப்போது இரண்டு சொற்கள் சேரும்போது  வருமொழி முதல் எழுத்து வல்லினமாக   இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம்   வல்லினம் மிகாது என்பதை இக்கட்டுரையில்   காண்போம்.   க  ,ச  ,ட  ,த  ,  ப  ,  ற ஆறு எழுத்துகளும்   வல்லினம் எனப்படும்.  இவற்றுள்  ட ,  ற ஆகிய இரண்டு எழுத்துகள்   மொழிமுதல் வராது.  மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும்  வருமொழி முதல் எழுத்தாக வரும்போது   எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல்   இயல்பாக வரும் என்பதைக் காண்போம். 1.    உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. முதலாவது உம்மைத்தொகை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.   இரண்டு சொற்களின் இடையில் அல்லது...

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

    இருபெயரொட்டுப் பண்புத்தொகை பண்புத்தொகை என்பது  ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நின்று பண்பும் பெயரோடு பண்பிப் பெயர் தொடர வருவதாகும். பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும் செந்தாமரை செம்மை+ தாமரை= செந்தாமரை இதில் , செம்மை   என்பது பண்புப்பெயர். ஆகிய என்பது பண்பு உருபு. தாமரை என்பது பண்பி. இதனைப் போன்றே வட்ட நிலா என்பது வட்டமாகிய நிலா என்றும் முத்தமிழ் மூன்றாகிய தமிழ் என்றும் இன்சொல் என்பது இனிமையான சொல் எனவும் விரித்துப் பொருள் கொள்ளப்படும். இவற்றில் ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து நிற்கிறது. பண்பும் பெயர் நிறம்,குணம்,வடிவம் சுவை என்னும் நான்கின்  அடிப்படையில்  வரும். பண்புத்தொகையில் மற்றொரு வகை இருபெயரொட்டுப் பண்புத் தொகை. இருபெயரொட்டுப் பண்புத் தொகை பண்புப்பெயர் இடம்பெறாத பண்புத்தொகை. எடுத்துக்காட்டு-  மார்கழித் திங்கள்    பொதுப்பெயரோடு சிறப்புப்பெயரோ   சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ  சேர்ந்து ஒரு பொருளை உணர்த்த வரும்  சொல்லை இருபெயரொட்டுப் பண்புத்தொகை   என்கிறோம்.     இரண்டு சொற்களுக்கும் இடை...

கள் என்ற பன்மை விகுதி வரும் இடங்கள்

   கள் என்ற பன்மை விகுதி வரும் இடங்கள் கள் 'என்னும் பன்மை விகுதியைக் கையாள்வதில்  நமக்கு பல்வேறு சந்தேகங்கள் உண்டு.  ஆளாளுக்கு கள்ளை கண்டமேனிக்குப்   பயன்படுத்துவார்கள்.    '    கள் 'அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே     உரியதாக தொல்காப்பியர் கூறுவார்.    "    கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே      கொள்வழி உடைய பலஅறி  சொற்கே "    அஃறிணையில் பன்மை வடிவங்கள் :             மரம் +  கள்  = மரங்கள்             யானை  +  கள்  = யானைகள்              ' கள் 'சேர்க்காமலும் அஃறிணை   இயற் பெயர்கள் வரும்.  அவை முடியும் வினைகளைக் கொண்டு   ஒருமையா அல்லது பன்மையா என்பதை நாம்  தெரிந்து கொள்ளலாம். "    தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்    ஒருமையும் பன்மையும்  வினையொடு வரினே " விகுதி இல்லாமல் வரும்  அஃறிணைப் பெயர்கள் தமக்கு முன்னோ பின்...

தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை

Image
      தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை தமிழ் அரிச்சுவடி படிக்காமல் தமிழ்   எழுத்துகளைத் தெரிந்து கொள்ள முடியாது.  இது  தமிழ் அகர வரிசை, தமிழ் நெடுங்கணக்கு   என்ற பெயர்களாலும்  அழைக்கப்படும்.   தமிழ் எழுத்துகள் எத்தனை என்ற   கேள்விக்கு  247 என்று நம்மில் பலருக்குத்   தெரியும். காரணம் தமிழராக இருந்து கொண்டு தமிழ் எழுத்துகள் எத்தனை  என்பதுகூட தெரியவில்லையே என்று யாராவது சொல்லிவிட்டால்... அப்படி ஒரு அச்சம் எப்போதும் மனதில் இருக்கும். எப்படி என்று கேட்டால்  முழுவதையும் சரியாகச் சொல்லத் தெரியாது. கூட்டிக் கழித்து சொல்லிப் பார்ப்போம். அங்கங்கே இடிக்கும். கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போம்.                   உயிர் எழுத்துகள்           =    12                   மெய்யெழுத்துக...