பாராட்டும் வாழ்த்தும்
பாராட்டும் வாழ்த்தும் " வாழ்த்துங்கள். அது உங்களை வாழ்த்தும். பாராட்டுங்கள். அது உங்களைப் பல பாராட்டுக்களுக்கு உரியவராக்கும்." "உலகுள்ளவரை உவகையோடு வாழ்க." இது ஒரு சாதாரண வாழ்த்து தான். ஆனால் இதன் தாக்கம் எவ்வளவு என்பது நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துகள் ஏதோ பொழுது போகாமல் கூறுகிறார்கள் என்று கூட நினைப்பவர்கள் உண்டு. சில சமயங்களில் கடனே என்று வாழ்த்துகள் அனுப்புவதும் உண்டு. வாழ்த்துகள் கூறுவதற்கு அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. இது சோம்பேறித்தனமா அல்லது நாம் வாழ்த்தும் அளவுக்கு இவர் அப்படி ஒன்றும் பெரிய ஆளா என்ற நினைப்பா என்று சொல்லத் தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம். இவை நமக்கும் இருக்கும் ஈகோவைத்தான் வெளிப்படுத்துவதாக இருக்கும். இதே போன்றுதான் பாராட்டவும் பலமுறை தவறி விடுகிறோம். பாராட்டினால் அவர் நம்மை விடப் பெரியவராகிவிடுவாரோ என்ற நினைப்பு பாராட்டுக்கு முட்டுக்கட்டை இடும். அல்லது நாம் பாராட்டுவதால் என்ன கிடைத்...