செவியிற் சுவையுணரா....
செவியிற் சுவையுணரா... செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் " குறள்- 420 செவியிற்-காதினால் கேட்டறியும் சுவையுணரா - அறிவுச் சுவை அறியாதவர் வாயுணர்வின் -வாயால் உண்ணும் உணவின் சுவை அறியும் மாக்கள் - விலங்குப் பண்பு கொண்ட மக்கள் அவியினும் - இறந்தாலும் வாழினும் -வாழ்ந்தாலும் என் - என்ன செவிச்சுவை இல்லாமல் வாயினால் நுகரும் உணவின் சுவை மட்டும் அறியும் பகுதறிவில்லா மக்கள் இருந்தாலும் இறந்தாலும் என்ன பயன்? விளக்கம்: செவிச்சுவை என்பதுசொற்சுவை, பொருட்சுவை என இருவகைப்படும். சொற் சுவை பொருட்சுவை இரண்டும் கேட்டு அறியும் சுவையின் பாற்படும். வாயின் சுவை அறுசுவைகளாகும். ஒருவன் செவிச்சுவை அதாவது கேள்வி அறிவு இல்லாதிருக்கிறான். உணவின் சுவை அறியும்...