முதல் வகுப்பில் நான்...
பதவி உயர்வு மூன்று வயதினில் கையில் டம்ளரோடு பள்ளி வாசலில் நின்றிருந்தேன். பள்ளியில் சேர்த்துவிட்டால் தன் கடமை முடிந்தது என்று கையைப் பிடித்து தரதரவென்று பள்ளிக்குள் இழுத்துச் சென்றார் அம்மா. பள்ளிக்குள் நுழைந்ததும் "பள்ளிக்கூடத்தில் சேர்க்கணுமா அதோ அந்த அறையில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை இருப்பார். போய் சேருங்கள் " கை காட்டிவிட்டார் பள்ளி ஊழியர் கமலம். கமலம் கை காட்டிய அறையை நோக்கி சென்று, நானும் அம்மாவும் சேர்ந்து எட்டிப் பார்த்தோம். "பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க வந்தீங்களா...வாங்க...வாங்க "வரவேற்றார் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை விமலா. "ரொம்ப சின்ன பொண்ணாக தெரிகிறாளே...வயசு ஐந்து ஆயிட்டுதா..." கேட்டார் ஆசிரியை. தலைக்குமேல் கையைக் இழுத்து காதைத் தொட்டுவிடச் சொன்னார் ஆசிரியை. சட்டென்று கையை வைத்து தொட்டு விட்டேன். "நல்ல சாமர்த்தியம்..."சிரித்துக்கொண்டே கையை இழுத்து காதைத் தொட உதவி செய்தார் ஆசிரியை. என்னால் தொட முடியவில்லை. "வயசு இன்னும் ஆகலியே... அடுத்த வருடம் வாங்க..." என்று சொல்லி அம்மாவின் கோரிக்கையை ...