போராட்டம்
போராட்டம் காலையில் இருந்தே ஊர் களை கட்ட ஆரம்பித்தது. "அண்ணே நீங்க வாரீங்க ... தம்பி நீயும் வாயேன் " என்று ஆளாளாளுக்கு எங்கேயோ சிற்றுலா செல்ல ஆள் திரட்டுவதுபோல யாரையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். "மாமா நீங்க வாறீங்களா ?"என்றான் முத்துசாமி. "என்ன தம்பி அப்படி கேட்டுபுட்ட நான் இல்லாமலா...அப்போ எத்தனை மணிக்குப் போகணும்" என்றார் பெரிய வீட்டுப் பிரகாசம். "ஒன்பது மணிக்குப் போகணுமாம். தலைவர் ஐயா சொல்லி இருக்காங்க..." "நேரம் இருக்குல்ல...ஒரு எட்டு போயி வயலை பார்த்து வாரேன்." சொல்லியபடி வயலை நோக்கிச் சென்றார் பிரகாசம். "சுருக்கா வந்துடுங்க தாத்தா... பிறகு எல்லாரும் உங்களை விட்டுட்டுப் போயிடுவாங்க..." தாத்தாவை விட்டுவிட்டு எல்லோரும் போயிடக் கூடாதே என்ற அக்கறையில் பேசினான் பேரன் பாலன் . பிரகாசத்தின் இளைய மகன் கந்தசாமி கல்லூரிக்குப் போகும் வாலிபன். அவன் போராட்டத்தைப் பற்றிக் கேட்டதில் இருந...