தற்குறிப்பேற்ற அணி
தற்குறிப்பேற்ற அணி செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி. செய்யுளில் சொல்லழகு, பொருளழகு இரண்டும் கூடி இருக்கும்போதுதான் படிப்போருக்கு செய்யுளைப் படிக்க வேண்டும் என்ற வேட்கை ஏற்படும். புலவர் தன் உள்ளக் குறிப்பைச் செய்யுளில் வெளிப்படுத்துவதற்காக அணி இலக்கணத்தைக் கையிலெடுக்கும் இடங்கள் உண்டு. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின்மீது கவிஞர் தனது குறிப்பை ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். . " பெயர்பொருள் அல்பொருள் என இருபொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்" - தண்டியலங்காரம் . அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் இவற்றின் இயல்பான செயலின் மீது புலவர் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறது தண்டியலங்காரம். தற்குறிப்பேற்ற அணி என்றதுமே நம் நினைவில் பள்ளிப் பருவத்தில் படித்த சிலப்பதிகார காட்சி கண்முன் வந்து வந்து நிற்கும். ...