Posts

Showing posts with the label செந்தமிழே உயிரே நறுந்தேனே -பாரதிதாசன்

செந்தமிழே உயிரே நறுந்தேனே

செந்தமிழே உயிரே நறுந்தேனே  தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து "நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள். அதேபோன்று பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து எது என்பது தெரியுமா? பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே...." என்ற வாழ்த்துப் பாடல்தான் பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக உள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் தமது  தமிழ் அமுது பாடல் தொகுதி  இரண்டாம் பகுதி முதல் பாடலாக இதனை எழுதியிருந்தார். இந்தப் பாடல்தான் பாண்டிச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாண்டிச்சேரி அரசால் தேர்வு  செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரி அரசின் எல்லா அரசு விழாக்களும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியே தொடங்கப்படும்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்  இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் அவர்கள். தமிழைத் தாயாக உருவகப்படுத்தி பாரதிதாசன் பாடிய   தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதோ உங்களுக்காக: வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே...