நீலச் சிற்றாடைக்கு நேர்
நீலச் சிற்றாடைக்கு நேர் கடையேழு வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுபவர் பாரி. முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி என்று கொண்டாடுகிறோம். இரக்க குணம் கொண்டவர். வள்ளல் இப்படி ஊரெல்லாம் புகழும் பெருமைக்குச் சொந்தக்காரர். பறம்பு மலைப் பகுதிக்கு மன்னன். எவ்வளவு நல்ல குணநலன்கள் பெற்றிருந்தாலும் அரசன் என்றால் எதிரிகள் இருக்கத்தான் செய்வர். எதிரிகளோடு போரிட வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்படி ஒரு போரில் பாரி இறந்து போகிறார். பாரிக்கு இரண்டு மகள்கள். அங்கவை,சங்கவை என்று அழகான பெயர் சூட்டி வைத்திருந்தார் பாரி. இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முன்பாகவே பாரி இறந்து விடுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை பாரியின் நண்பரான கபிலர் கையிலெடுத்து வேற்று நாட்டு மன்னர்களோடு பேசிப் பார்க்கிறார். யாரும் பாரி மகளிரை மணம் முடிக்க முன்வரவில்லை. அந்தக் கவலையில் இறுதியில் கபிலரும் உயிர் துறந்து விடுகிறார். இதற்கிடையில் மூவேந்தர்கள் பறம்பு நாட்டை அபகரித்து கொள்கின்றனர். இப்போது பாரி மகளிருக...