செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம் ...
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்... செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை." குறள் : 411 செல்வத்துள் _ செல்வங்களுள் செல்வம் _ செல்வம் எனப்படுவது செவிச் செல்வம் _கேள்விச் செல்வம் அச் செல்வம் _ அந்தச் செல்வம் செல்வத்துள் _ செல்வங்கள் எல்லாம் _ எல்லாவற்றிலும் தலை _ முதன்மையானது ஒருவனுக்குச் சிறந்த செல்வம் என்று கூறப்படுவது கேள்வியறிவால் வரும் செல்வமேயாகும். அச்செல்வம் எல்லாச் செல்வத்தை விடவும் தலையாயச் செல்வமாகக் கருதப்படும். விளக்கம் : " கற்றலின் கேட்டலே நன்று " என்ற பழமொழி ஒன்று உண்டு. கல்வியும் கேள்வியும் சேர்ந்து அறிவுச் செல்வத்தைக் கொடுக்கிறது. வெறுமனே கல்வியால் மட்டும் அறிவைப் பெற்...