மகாராஷ்டிரா தினம் 2020
ம காராஷ்டிரா தினம் மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு அருமையான மாநிலம். மகாராஷ்டிரம் என்றதும் அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது அதன் தலைநகரான மும்பை என்றால் மிகையாகாது. இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுள் முதன்மையானது மும்பை. வந்தோருக்கெல்லாம் வாழ்வளிக்கும் தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. படித்தவர்களுக்கு மட்டுமல்ல படிக்காத பாமர மக்களுக்கும் ஏராளமாக வேலைகள் தரும் சிறப்பு மகாராஷ்டிரத்திற்கு உண்டு. வந்தோரைப் பசியாற வைத்து பார்க்கும் பண்பு மும்பையின் சிறப்பு. மொழியறியா மக்களும் பசியாற்றிக் கொள்ள தொழில்கள் ஏராளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 1960ஆம் ஆண்டுக்கு முன் இது பம்பாய் மாகாணமாகவே இருந்து வந்தது. மாநில மறு சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மராட்டி மற்றும் கொங்கணி பெரும்பான்மையாகப் பேசும் மக்கள் உள்...