Posts

Showing posts with the label உலக மகளிர்தின கட்டுரை

உலக மகளிர் தினம்

    உலக மகளிர் தினம் மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா " என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள். ஆம். பெண்ணாக பிறப்பதற்கே பெரும்பேறு பெற்றிருத்தல் வேண்டும். ஆக்கும் சக்தி கொண்டவள் பெண். அவளன்றி ஒரு அணுவும் அசையாது. உலகம் பெண்களைச் சுற்றி சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. பெண்ணை நீக்கிவிட்டு இந்த உலகத்தைப் பார்ப்போமானால் அது ஒரு சூனியமாகத்தான் தெரியும். மகிழ்ச்சி இல்லாத பூமியாக இருக்கும். இன்பமும் மகிழ்ச்சியும் தந்து உலகை இயக்கிக் கொண்டிருப்பவள் பெண். ஆனால் ஒரு காலத்தில் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாகவே பார்க்கப் பட்டாள். அடிமையாகவே நடத்தப்பட்டாள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்று இருந்த காலம் மாறி இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்துவிட்டோம். இப்படி பெண்கள் தங்களை முன்னேற்றம் அடைந்தவர்களாக மெய்ப்பிப்பதற்கு முன்னர் பல போராட்டங்களையும் சவால்களையும் கடந்து வர வேண்டியதாயிற்று. பெண்களை பலவீனமானவர்களாகவே பார்த்து வந்த சமூகம் மிக எளிதில் பலசாலிகள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. மெல்ல மெல்ல தொழில் துறையில் தடம் பதித்த பெண்களுக...