தீதும் நன்றும் பிறர் தர வாரா....
தீதும் நன்றும் பிறர் தர வாரா.... எங்கேயோ கேட்ட குரல். ஒரு வேளை பள்ளியில் ஆசிரியர் வாசித்திருப்பாரோ? எப்போதோ படித்த வரி. தேர்வுக்காக படித்திருப்போமோ? பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என விட்ட வரி. நல்ல கருத்துள்ள பாடல்களை அப்படியே அந்தந்த வகுப்புகளில் விட்டுவிட்டு கடந்து போவதுதானே நம்மில் பெரும்பாலோனோரின் வழக்கம். அப்படி விட்டு வந்த வரியாக இருக்குமோ? ஆனால் முதல் வரி மட்டும் உலகம் சுற்றும் வாலிபனாக என்றும் இளமையோடு உலகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சபை வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்று நிற்கிறது. தமிழரின் பெருமையே இந்த ஒற்றை வரியில்தான் அடங்கி இருக்கிறது என்று உரத்தக் குரலில் உலகம் முழுவதையும் சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எவ்வளவு கனமானது. கருத்தாழமிக்கது என்பது அடுத்தடுத்த வரிகளை வாசிக்கும்போதுதான் புரியும்.இத்தனை நாளும் இந்தப் பாடலை படித்தும் கண்டும் காணாமலும் கடந்து போயிருக்கிறோமே என்று நம்மை கலங்க வைக்கும். நான் எந்தப் பாடலைச் சொல்கிறேன் என்பது இப்போது உங்களு...