Posts

Showing posts with the label இழுக்குடைப் பாட்டிற்கு இசை நன்று-ஔவை

இழுக்குடைப் பாட்டிற்கு இசை நன்று

இழுக்குடைப் பாட்டிற்கு இசை நன்று நீயா....நானா என்ற போட்டி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சங்ககாலம் முதற்கொண்டே இப்படிப்பட்ட  போட்டிகள்  நிகழ்ந்திருக்கின்றன. இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும் போட்டி இருப்பதுண்டு. ஔவை, கம்பர் ,ஒட்டக்கூத்தர் ,புகழேந்தி  என்று எந்தப் புலவரும் இதற்கு விதி விலக்கல்ல. கம்பர் விடுகதைச் சொல்லப் போகிறேன் என்று  ஒருகாலடி ஆலிலைப் பந்தலடி என்று ஒரு விடுகதையைப் சொல்ல..... பதில் சொல்கிறேன் என்று ஆரையடா சொன்னாயடா என்று ஔவை போட்டுத் தாக்க அங்கே ஒரு இலக்கியப்  போரே நடந்தது. அந்த இலக்கியப்போர் கற்போருக்கு இன்றுவரை நல்ல விருந்தாகவும்  அமைந்திருக்கிறது. கல்வியா? செல்வமா? வீரமா? என்று ஒரு போட்டி. அவரவர் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்க  அவர்கள் கொண்டுவந்து நிறுத்திய கதாப்பாத்திரங்கள் இன்றுவரை நெஞ்சோடு உலா வருகின்றன. பொழுதுபோக்கு போட்டியாக இருந்தாலும் அது வாசிப்போருக்கு கேட்போருக்கு நல்ல விருந்தாகத்தான் இருந்திருக்கிறது. அதன்மூலம் நாம் அடைந்த நன்மைகள்  ஏராளம். நடந்து முடிந்த காலத்தில் அது விவாதம் பொருளாக இருந்தாலும்கூட  இன்றுவரை இலக்கிய...