Posts

Showing posts from November, 2023

அந்தநாள்

அந்த நாள்.... வானிலா ஒளி வரப்பின்மீது விழ கையில் லாந்தர் ஒளி காலுக்கு வழிகாட்ட கால்கடுக்கக் கடைமடைப் பயணம் ஓடையில் ஓடும்  சிறுமீன் கண்கள்  சிதறும் நிலவொளியில் மின்னிடும் தாரகையாய் மிரட்டி அழகூட்ட வரப்பில் தாண்டி ஓடும் தவளை கால்கள் மேல் துள்ளிக் குதித்து அச்சத்தில் குதித்து கால்கள் இடறி  கால்வாயில் விழுந்த அந்தநாள் நினைவுகள் மெல்ல வந்து சிரிக்க நாணத்தால் முகம் கவிழ்ந்தேன் அவைதான் எத்துணை இனிய நாட்கள் சிள்வண்டு சுற்றி ஒலி எழுப்ப ஒற்றைப் பறவையின் சிறகடிப்பு தன் இருப்பைச் சொல்லி வைக்க யாருல அங்கே என் மடையை அடைத்தது என்ற பக்கத்துத் தோட்டத்து மாமாவின் குரல் அப்பப்போ வந்து ஆள் அனக்கம் இருக்கிறது அச்சம் தவிர்  என்று சொல்லிச் செல்ல அந்த நாள் நினைவுகள் கடைமடைக்கு அழைத்துச் சென்று கண் சிமிட்டிக்  கவி பாட வைத்தது முதல்மடை திறந்து மொத்த தண்ணீரையும் வரப்பு மவுழ பெருக்கி மகிழும் முன்னர் மொத்தமாய் முழுநீரும் நின்று போக யாரங்கே என் படையை அடைத்தது லாந்தர் விளக்கோடு மடை நோக்கிச் செல்ல அங்கே காத்திருந்தது அதிர்ச்சி மடைமீது அய்யனாரோ  இவர் அர்த்த ராத்திரியில் கடைமடையைக் ...

.

தீதொழிய நன்மை செயல் மனித மனங்கள் வேறுபடுகின்றன. மதங்கள் என்றும் வேறுபடுவதில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பை மட்டும்தான். தீமை செய்வதற்கு எந்த மதமும் அனுமதிப்பதில்லை. நன்மை செய்தால் நல்லது கிடைக்கும். என்பதை ஆழ விதைத்துச் செல்வது மதங்கள். ஆனால் மதங்களுக்குள் ஏன் இத்தனை மாறுபாடுகள்? வேறுபாடுகள்? மதத்தின் பெயரால் ஏன் சண்டைப் சச்சரவுகள் ? இப்படியொரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம்  மனித மனங்களும் அவற்றில் நிரம்பிக் கிடக்கும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் அன்றி வேறென்ன சொல்வது? அதனை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது? நானும் நீங்களும் சொன்னால் கேட்டுவிடவா போகிறார்கள்? இப்படி ஒவ்வொருவரும்  நமக்கென்ன நமக்கென்ன  என்று விலகிச் சென்றால் எப்படி? யாராவது ஒருவர் பேசித்தானே ஆக வேண்டும்.புரிய வைத்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? அதற்குதான் யாம் இருக்கிறோம் என்கிறார் ஔவை. தனது நல்வழி பாடல்களின் முதல் பாடலே  நல்வழிப்படுத்தவதாக அமைந்துள்ளது. இதோ பாடல் உங்களுக்காக... "புண்ணியம் ஆம் பாவம் போல் போனநாள் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால் ஈதொழி...

வாழ்த்துப்பா தமிழாசிரியர் குழுமம்,       மும்பை. கூடல் மாநகரில் கூடிய முதலணி கூடி  செய்து வந்தது  தமிழ்ப்பணி மராட்டியத்தில் மலர்ந்த தமிழாசிரியர் கூட்டணி - மும்பையில் ஆற்றி வருவது நல்லதோர்  அறப்பணி  ஆசிரியப் பணி என்பது  அறப்பணி அறப்பணி தான் குழுமத்தின் முதற்பணி பொதுப்பணி ஆற்றுதல்  என்றும் நற்பணி - அதனை \  அர்ப்பணிப்புடன் ஆற்றுதல்தான்  குழுமத் தனிப்பாணி  ஆசிரியர் யாவரும் கூட்டணியின் பின்னணி ஆசிரியர் குழுமத்தின் பெயர் என்றும் முன்னணி ஆசிரியரொடு திரளும்  என்றுமொரு பேரணி - அது மும்பைத் தமிழுக்கு வாய்த்த  நற்பெயரணி \ வாணிக்குச் சேவை செய்யும் தோணி நீவீரெனல் உயர்வு நவிற்சி அணி பாரணித் தமிழை இழுக்கும் அழகுத் தேரணி -என்று சொல்வது  வேற்றுப் பொருள் வைப்பணி தமிழுக்காய் உழைக்கும் உயிர்மெய் என்றழைப்பது இங்கே என் தற்குறிப்பேற்ற அணி வானன்ன சேவை எனவாழ்த்தி மகிழ்வது -உமக்கு  நான்  சொல்லி மகிழும் உவமையணி ஓரணியாய் இருப்பதால் கிடைத்ததிந்த உயர்வணி வேரணி  வேற்றுமையில்லா அணியென்ற சிறப்பணி பூரணியாய் உவந்து நி...