Posts

Showing posts with the label எவ்வது துறைவது உலகம்...- திருக்குறள் விளக்கம்

எவ்வது துறைவது உலகம்...

Image
எவ்வது துறைவது உலகம்..... "எவ்வது துறைவது உலகம் உலகத்தோடு அவ்வது துறைவது அறிவு"         குறள் : 426 எவ்வது - எவ்வாறு துறைவது- வாழ்வது உலகம்-உலகத்தினர் உலகத்தோடு- உலகம் செல்லும் வழியில்  அவ்வது- அவ்வாறு துறைவது - சேர்ந்து ஒழுகுவது அறிவு- அறிவார்ந்த செயல் உலகம் எவ்வாறு வாழ்கிறதோ அவ்வழியில் நாமும் சேர்ந்து ஒழுகுதல் அறிவார்ந்த செயலாகும். விளக்கம் : உலகம் எவ்வாறான ஒழுக்க நெறியில் செல்கிறதோ அவ்வழியில் நாமும் செல்வதுதான் அறிவார்ந்த செயலாகும். அறிவு எனப்படுவது யாதெனில் உலக மக்கள் எத்தகைய ஒழுக்க நெறியில் தமது வாழ்க்கைப்பாதையை அமைத்துக் கொள்கிறார்களோ அவ்வழியில் நாமும் நடைபோட வேண்டும். எல்லோருக்கும் ஒருவழி எனக்கு மாற்றுவழி என்று எதிர்த்திசையில் பயணிப்பது அறிவார்ந்த செயலாகாது. உலகில் நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. அப்படியானால் உலகம் என்று வள்ளுவர் கூறியது இவ்விரு  திறத்தாரையுயும்  உள்ளடக்கியதாகவே இருக்கும். எனினும் நல்லொழுக்க நெறியை வலியுறுத்தும் வள்ளுவர் உலகம் என்று குறிப்பிடுவது நல்லொழுக்கப் பண்பு கொண்டவர்களை என்றுதான் எடு...