Posts

Showing posts with the label கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் -கட்டுரை

கண்ணுக்குக் கண் பல்லுக்குப்பல்

கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்." " அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்." இப்படி தப்பு செய்தவன் தண்டனை பெற்றே தீருவான் என்று முன்னோர்கள் சொல்லிச் சொல்லி நம்மை வளர்த்திருக்கின்றனர். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை;  எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும். இப்படிப்பட்ட எண்ணங் கொண்டவர்கள்தான் இன்றைய சூழலில் அதிகம். இப்படி பழக்கப்பட்ட மொழிகளோடு இன்னொரு மொழியும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. " கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்" இது என்ன கண்ணுக்குக் கண் ; பல்லுக்குப் பல் ...? சற்று சிந்திக்க வைத்தது. பதிலுக்குப் பதில் கொடுக்க வேண்டும். அடித்தவனுக்கு அதே அடியைத் திருப்பிக்  கொடுக்க வேண்டும். இதுதான் இந்தப் பழமொழியின் கருத்து. இது சாத்தியப்படுமா? இப்படிச் செய்வது நன்மையான செயலா? என்று எண்ணத் தோன்றும். சரியோ ...தவறோ ..ஆனால் அப்படிச்  செய்தால்தான் சில நேரங்களில் குற்றங்கள் குறையும். அப்படி இல்லை என்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றபடி ஆளாளுக்கு கம்பைத் தூக்கிக் கொண்டு  புறப்ப...