Posts

Showing posts from April, 2020

நேரமில்லைக்கு நேரமில்லை

Image
                      நேரமில்லைக்கு நேரமில்லை நேரமில்லைக்கு நேரமில்லையா?    இது என்னப்பா வேடிக்கை.   உண்மை தாங்க.    நேரமில்லை என்று சொல்வதற்கே நேரமில்லை.    சிலர்   சதா சக்கரத்தைக் கால்களில் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பார்கள்.    அவர்களுக்கு நின்று பேசக் கூட நேரமிருக்காது.    இது ஒரு ரகம்.    இன்னொரு ரகத்தினர் உண்டு.    எதற்கு எடுத்தாலும் எனக்கு நேரமில்லை என்று கூறி வேலையைத் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருப்பர்.      பள்ளிப் பருவத்தில்  நேரமில்லை..நேரமில்லை...என்ற வார்த்தையைச் சொல்லி எப்படி எப்படி எல்லாம் விளையாட்டுக் காட்டியிருப்போம்.   நேரமில்லை....   இல்லை...இல்லை..இந்த வார்த்தையைப் பயன்படுத்தி யாரையெல்லாம் ஏமாற்றியிருப்போம்.     வீட்டுப் பாடம் எழுதி வரவில்லையா....உடனே ஒரு கதை வரும் பாருங்க..     நேற்று எங்க வீட்டுக்கு விருந்துக்காரங்க வந்துருந்த...

மகாராஷ்டிரா தினம் 2020

Image
                            ம காராஷ்டிரா தினம் மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில்  அமைந்துள்ள ஒரு  அருமையான மாநிலம்.  மகாராஷ்டிரம் என்றதும் அனைவர்  கவனத்தையும் ஈர்ப்பது அதன் தலைநகரான மும்பை என்றால் மிகையாகாது. இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுள் முதன்மையானது மும்பை.   வந்தோருக்கெல்லாம் வாழ்வளிக்கும்  தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. படித்தவர்களுக்கு மட்டுமல்ல படிக்காத பாமர மக்களுக்கும் ஏராளமாக வேலைகள் தரும் சிறப்பு மகாராஷ்டிரத்திற்கு உண்டு. வந்தோரைப் பசியாற வைத்து பார்க்கும் பண்பு மும்பையின் சிறப்பு. மொழியறியா மக்களும்  பசியாற்றிக்  கொள்ள தொழில்கள் ஏராளம்  இங்கே கொட்டிக் கிடக்கின்றன.   1960ஆம் ஆண்டுக்கு முன் இது  பம்பாய் மாகாணமாகவே இருந்து வந்தது.   மாநில மறு சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மொழிவாரியாக மாநிலங்கள்  பிரிக்கப்பட்டபோது மராட்டி மற்றும் கொங்கணி பெரும்பான்மையாகப்  பேசும் மக்கள்  உள்...

உழைப்பாளர் தினம்

Image
                          உழைப்பாளர் தினம்            உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?   "  பத்து விரல்களும் பதறாது உழைத்தால்    அஞ்சு விரலால் அஞ்சாது உண்ணலாம் "என்பார்கள்.   ஆனால் உண்மையில் இதுதான் நிலைமையா?    நாள் முழுவதும்  கூன் ஒடிய  உழைத்தாலும் கூலி என்னவோ  அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான். இதுதான் உழைப்பாளிகளின் இன்றைய நிலை. உழைப்பாளி தன் உழைப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டால் ஒட்டுமொத்த உலக இயக்கமே நின்றுவிடும்.  உழைப்பாளி வர்க்கம் நாள்  முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தது.  உழைத்து உழைத்து  நைந்துபோன  கைகளில் மலர் கொடுத்து,  அவன் வைரம் பாய்ந்த மார்புக்கு ஆரம் சூட்டி அழகு பார்க்கும்  நாள்தான் இந்த உழைப்பாளர்  தினமான மே தினம். உழைப்பாளர்கள் பட்ட இன்னல்கள் தங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்காக அவர்கள் கடந்துவந்த  பாதை, சிந்திய செந்நீர் என்று இந்த உழைப்பாளர் தினத்திற்கு நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நெடி...

சிலேடை சிதறல்கள்

                          சிலேடை சிதறல்கள் ஒருசொல்லோ சொற்றொடரோ  இரு பொருள்படும்படி சொல்லப்படுவதை  சிலேடை என்பார்கள்.  ஓடு என்றால் பின்னங்கால் பிடறியில்  அடிக்க ஓடுபவர்களும் உண்டு. எங்கே ஓடு...எங்கே ஓடு  என்று அண்ணாந்து கூரையைப்  பார்ப்பவர்களும் உண்டு.  ஆடு என்றதும் சிலர் ஜங்...ஜங்... என்று ஆடித் தீர்த்துவிடும் ஆட்கள் உண்டு.  எங்கே ஆடு ...எங்கே ஆடு  .... கொழுத்த ஆடா? ஆட்டுக் கறி சாப்பிட்டு நாளாகுது என்று   ஆட்டைத் தேடுபவர்களும் உண்டு. இப்படி பல  இரட்டை அர்த்த சொற்களை நாம் கேட்டிருப்போம்.  அவற்றைத்  தகுந்த இடங்களில் கையாளத்  தெரிந்தவர்கள்தான் சிறந்த பேச்சாளர்களாக  இருக்கின்றனர்.புலமை மிக்கவர்களாகவும் அடையாளம் காணப்படுகின்றனர்.  இரண்டு பொருள்படும்படி பேசி மக்களிடம் கைத்தட்டல் வாங்கினால்தான்  சிறந்த பேச்சாளர் என்ற பெயரும் கிடைக்கிறது.   சிலைடையில் பேசி அசத்திய தலைவர்களின் பேச்சிலிருந்து ஒன்றிரண்டை உங்களுக்காக தந்துள்ளேன். நீங்களும் ச...

யாகாவாராயினும்....

Image
                 யாகாவாராயினும் .... காக்க ....காக்க...  நாவைக் காக்க  அதென்ன நாவைக் காக்க...  நாவைக் காக்க முப்பத்து இரண்டு  காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?  இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்  போட்டு காக்க வேண்டும்?  நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க...  நாமதான் அதை அடக்கி வைக்கணும்.  பகலில் பக்கம் பார்த்துப் பேசணும்.  இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமில்ல.. " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்     சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"     என்கிறார் வள்ளுவர்.   வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்   வாங்கிக் கட்டிக் கொண்ட   கதைகள் பல உண்டு.  ஓர் ஊரில்  ஒரு  கழுதையும் ஒரு நரியும்  நண்பர்களாக இருந்து வந்தன.  கழுதை பகல் முழுவதும் பொதி சுமக்கும்.  இரவு வந்ததும் தன் நண்பன் நரியோடு  சேர்ந்து வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்னும். ஒருநாள் இரவு திருட செல்லும்போது  கழுதை தன்...

ஒட்டா ஒருமதி கெட்டாய்

                            ஒட்டா ஒருமதி கெட்டாய்  போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம்.      ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன.      ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக போட்டி போட்டுக் கொள்கிறான்.      தான்தான் பெரியவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக போட்டி போடுகிறான்.      போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு....      இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு.      அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று அன்றாடம் அறிவுரை கூறும் பெருமதியாளரிடம்  அவை காணப்படும்போது அது நம்மை சற்று அதிர்ச்சி அடைய வைக்கிறது.     இந்தப் போட்டியும் பொறாமையும் புலவர்களையும் விட்டு வைக்கவில்லை.      குறை கண்டு பிடிப்பதிலேயே  சிலர் குறியாக இருப்பர்.      இந்தக் குணம் ஔவையிடம் நிரம்பவே இருந்தது.      எப்போதும் ஔவைக்குத் தனது புலம...

இரவு நடத்தும் நாடகம்

                          இரவு நடத்தும் நாடகம் கயிற்றுக் கட்டிலில்  மல்லாந்து கிடந்து  அண்ணாந்து பார்க்கையில்  பஞ்சான மேகங்கள்    துஞ்சாமல் ஓட்டம் காட்டும் _ மேகங்கள்   துஞ்சாமல் ஓட்டம் காட்டும்.!    கொஞ்சமாய் ஒளி சிந்தி    கஞ்சமாய் சிரித்து    மிஞ்சும் நேரத்தில்    விஞ்சும்  மொழி பேசி   கொஞ்சித் துயில் கெடுக்கும் _ விண்மீன்கள்   கொஞ்சித் துயில் கெடுக்கும்.!    ஊதக் காற்றும்    உரசி என்றன் காதோடு    ஊமைக் கதைகள் பேசி    உள்ளம் குளிர      உறவாடி நடுங்க வைக்கும் _ காற்று      உறவாடி நடுங்க வைக்கும்.!                                    கார்மேகம் தேடி   கண்கள் ஓடுகையில்   வெற்று உடம்பைக் காட்டி   சற்றும் கள்ளம் இல்லை   சொல்லாமல் சொல்லி நிற்கும் _ வானம்  சொல்லாமல...

ஆரையடா சொன்னாயடா

Image
                              ஆரையடா சொன்னாயடா  எங்கேயோ கேட்ட குரல்.  அங்கங்கே அடிக்கடி கேட்டுக்  கொண்டிருக்கும் குரல். நாளும் நமக்கு ஆர்வத்தைத் தூண்டும் குரல் அது எந்த குரல் என்று கேட்க ஆசையா?   சொல்கிறேன்..வாருங்கள். நீயா ...  நானா...  என்ற போட்டி வரும்போது  உரசல்  ஏற்படுகிறது. அண்ணன் தம்பிக்குள் போட்டி. அக்கா தங்கைகளுக்குள் போட்டி. கட்சிகளுக்குள் போட்டி. தொண்டர்களுக்குள் போட்டி தொழிலில் போட்டி. கடவுள்களுக்குள் போட்டி. கடவுளைத் தொழுவதில் போட்டி. உண்பதில் போட்டி . உடுப்பதில் போட்டி. ஏன் உறங்குவதில் கூட போட்டி.           பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி. அண்டை மாநிலத்தோடு போட்டி. வீட்டுக்கு வீடு போட்டி. நாட்டுக்கு நாடு போட்டி. இப்படி போட்டியோ போட்டி என்று போட்டி நிறைந்த உலகில் போட்டிப் போட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா இடங்களில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்பதில்தான்  போட்டி எழும்.  உலகம் இப்படித்தான். ...

தாய்மொழி

                                தாய்மொழி தாயிடமிருந்து கற்கும் முதல் மொழி தாய்மொழி.  அதுமட்டுமல்லாது  தாயாக இருந்து பண்பாட்டைக் காக்கும்மொழி தாய்மொழி.    அறிதலுக்கும் புரிதலுக்கும் தெரிதலுக்கும் உணர்தலுக்கும்        காரணமாக இருப்பது  மொழி.    "மலையிடை பிறந்து மாந்தர் தொழ உயர்ந்து      உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி  பெற்றவை  இரண்டு   மட்டுமே .  ஒன்று செங்கதிர்  மற்றது செந்தமிழ்"    என்கிறது தண்டியலங்காரம்.        "   தொன்மை முன்மை எண்மை ஒண்மை           இயன்மை வியன்மை தூய்மை தாய்மை           இளமை வளமை இறைமை மறைமை           இனிமை தனிமை அம்மை செம்மை "        என்ற பதினாறு பண்புகளும் ஒருங்கே பெற்ற ஒரே மொழி நம் தாய் மொழியாம் தமிழ் மொழி.    உலகில் ஆயிரக்கணக்...

விதைகள் தூங்குவதில்லை

                      விதைகள் தூங்குவதில்லை  "  விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவதில்லை" என்று சொல்வார்கள்.        ஆனால்  தூக்கத்தை விரும்பாதோர் யாருமே கிடையாது.  தூங்கியே பெயர் வாங்கிய கும்ம கர்ணன் போன்றோர் பிறந்த பூமி இது.       என்னைவிட்டால் மணிக்கணக்காக தூங்குவேன்.  என்னிடம்போய் விதைகள் தூங்குவதில்லை என்கிறீர்கள் ....கேட்க தோன்றும்.      அது தாங்க உண்மை.     நான் சொல்லலங்க...  இந்த பூமி சொல்லுது....கேளுங்க.      நாள் கணக்காக வானம் பார்த்த பூமி.      வானம் பார்த்து வாய் பிளந்து கிடந்தது. வானத்திற்கு பூமியின் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டது.          இது நாள் வரை தேக்கி வைத்திருந்த நீரை மழையாக  பொழிய ஆரம்பித்தது.          பூமி எங்கும் குளிர்ச்சி.          நான்கைந்து நாள்தான் இந்த நிலை.          பூமி எங்கும் ...

கன்னா பின்னா

                          கன்னா பின்னா  கன்னாபின்னாவா.....? வேண்டாமப்பா உங்க கன்னாபின்னா.  ஏதாவது   கன்னாபின்னா என்று பேசிப்புடுவேன்.. என்ற உங்கள் குரல்.கேட்கிறது....  கன்னாபின்னா என்று என்னைத் திட்டினாலும் பரவாயில்லை. கன்னா பின்னாவைப்பற்றி எழுதாமல்  போவதில்லை என்று முடிவு பண்ணி விட்டேன்.    இந்தக் கன்னாபின்னாவைப்பற்றி நீங்கள் எங்கெல்லாம் பேசினீர்கள் என்று சற்று நினைவுபடுத்திப் பாருங்கள்.   வீடு ஏன் கன்னாபின்னா என்று கிடக்குது ? எத்தனை முறை திட்டியிருப்பீர்கள்.             " என் முன் நிற்காத ஓடிடு.  கன்னாபின்னா என்று அடிச்சுபுடுவேன் " என்று அப்பா கத்தியிருப்பார்கள்.  தேர்வு எழுதும்போது  ' கன்னா பின்னா'  என்று எதையாவது எழுதி வைத்துவிட்டு  தத்தக்குபித்தக்கு என்று விழித்திருப்போம்.  கன்னாபின்னாவென்று எதையாவது  நோட்டு புத்தகத்தில் கிறுக்கிக்கொண்டேயிருப்போம். நினைவிருக்கிறதா?   நினைவில்லையா? சரி. போகட்டும்.   ...