விளாம்பழங்கள் எத்தனை
விளாம்பழங்கள் எத்தனை? ஒரு பழக்கடைக்காரர் விளாம்பழங்களை விற்று வந்தார். ஒருநாள் சிலர் அவர் கடையிலிருந்த பழங்களைத் திருடிக் சென்று விட்டனர். கடைக்காரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்துக் பார்த்தார். திருடனைப் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசனிடம் போய் முறையிட்டால் திருடு போன பழங்களுக்கு இழப்பீடாக பணம் தருவார் என்று நம்பினார். நேரே அரசரிடம் சென்று ,அரசே! என் கடையிலிருந்த விளாம்பழங்களை யாரோ திருடிக் சென்றுவிட்டனர். நான் பழங்களை விற்றுதான் பிழைப்பு நடத்தி வருகிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கைகளைப் பிசைந்து கொண்டு நின்றார். "எத்தனை பழங்கள் திருடு போயிருக்கின்றன?" என்று கேட்டார் அரசர். வியாபாரி திருதிருவென்று விழித்தார். "சரி அதை விடு. திருடு நிகழ்ந்த நேரத்தில் கடையில் எத்தனை பழங்கள் இருந்தன?" என்று கேட்டார். கடைக்காரர் " எத்தனை பழங்கள் இருந்தன என்று நினைவில் இல்லை. "என்றார். "திருடு போன பழங்கள் எத்தனை என்று தெரியாமல் எப்படி புகார் கொடுக்க வநாதிருக்கிறீர் " கோபப்பட்டார் மன்னர். "மன்னா! எனக்கு இப்போது நினைவு ...