என்பி லதனை வெயில்போலக் காயுமே...
என்பி லதனை வெயில் போலக் காயுமே... என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்" குறள் : 77 என்பு -எலும்பு இலதனை - இல்லாததை வெயில் - கதிரவனின் வெப்பம் காயுமே - கருக்கிவிடுவது போல - போன்று அன்பு - அன்பு இலதனை - இல்லாதவர்களை அறம் - அறமானது எலும்பில்லாத உயிர்களை வெயில் வாட்டி கருக்கிவிடுவதுபோல அன்பில்லாத உயிர்களை அறம் வாட்டி வருத்தும். விளக்கம் : அறம் என்பது எல்லாம் வல்ல ஒரு பேராற்றல். அது தூயதாய், நடுநிலை பிறழாததாய் நிற்கும். அதனைத்தான் அறக் கடவுள் என்று இலக்கியங்களில் பேசப்படுகிறது. எல்லா சமயமும் போதிக்கும் ஒரே தர்மம் அன்பு மட்டுமே. அன்பு மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் கடந்த ஒரு உன்னத நிலை. அந்த அன்பு ஒருவனிடம் இருந்தால் எந்தவித சண்டைச் சச்சரவுகளுக்கும் இடமிருக்காது. அன்பு ஒருவனிடம் இல்லையென்றால்...என்ன நடக்கும்? வள்ளுவர் கூறுகிறார் நீங்களே கேளுங்கள். "எலும்பில்லாத புழுக்கள் வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் துடிதுடித்து அங...