Posts

Showing posts with the label காளமேகமும் கண்ணதாசனும் -இலக்கிய கட்டுரை

காளமேகமும் கண்ணதாசனும்

காளமேகமும் கண்ணதாசனும்  காளமேகம் என்றாலே கார் மேகமென கவிமழை கொட்டும். அதில் தேன்சுவை கொட்டும். சொற்கள் முட்டி மோதும். எழுத்தும் பொருள் பேசும். எண்ணாத பொருள் எல்லாம் கூறி நம் எண்ணத்தைத் திசை திருப்பும். என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் தாதூ என்று ஊதி தள்ளிவிடுவார் காளமேகம். அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது இது என்ன உளறலா...ஊமைகளின் உதடு பிதுங்கலா...வெற்று எழுத்துக்களின் அணி வகுத்தலா... என மயங்க வைக்கும். பொருள் விளங்கிய பின்னர் மிரள வைக்கும்.வியப்பில் விழி விரிய வைக்கும். " எல்லாச்  சொல்லும் பொருள் குறித்தனவே" என்பார் தொல்காப்பியர். எழுத்தை எந்தப் பக்கம் திருப்பி போட்டும் பொருள் தரும் சொல்லை உருவாக்கித் தரும் சித்து தெரிந்தவர் காளமேகம். ஒருநாள் காளமேகத்திடம் அவருடைய நண்பர் ஒருவர் வந்து "தகர வருக்க எழுத்துக்களை வைத்து ஒரு  பாடல் பாட  முடியுமா?" என்று கேட்டுவிட்டார்.  "ஏன் முடியாது? இதோ இப்போதே பாடுகிறேன். கேளும் "என்றபடி பாடலைப் பாடினார். "தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்தித் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோத் தித...