Posts

Showing posts with the label ஒருமுகப்படுத்து

ஒருமுகப்படுத்து

Image
              ஒருமுகப்படுத்து    " ஒன்றே செய் நன்றே செய் ;  அதுவும் இன்றே செய்."   ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே  செய்ய வேண்டும்.செய்யும் வேலையை நல்லபடியாகச் செய்ய வேண்டும். அதனையும் உடனடியாக இன்றே செய்ய வேண்டும். நாளை நாளை என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. அது அந்த வேலையைச் செய்யாமல் தட்டிக் கழிப்பதற்காக நாம் சொல்லும் சாக்குபோக்கு  வார்த்தையாகும். எந்த ஒரு வேலையையும் தொடங்குவது கடினம். தொடங்கிவிட்டால் பாதி வேலை முடிந்த மாதிரிதான். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தைத் தேடுபவன் வெற்றியை  எட்டுவதே இல்லை என்று சொல்வார்கள்.    ஒருபோதும் அகலக்கால் வைக்கக் கூடாது. பலமரம் பார்த்த தச்சன்  ஒரு மரத்தையும் அறுக்க மாட்டான். ஒன்றே ஒன்று மட்டுமே செய்ய வேண்டும். அதிலும் உங்கள் பெயர் சொல்லும்படி செய்ய வேண்டும். முழு ஈடுபாட்டோடு செயலில் இறங்க வேண்டும். சிந்தையை ஒருமுகப்படுத்தி ஒரு  வேலையில் ஈடுபடும்போதுதான் நம்மால் வெற்றி காண முடியும். கவனச்சிதறல் காரியத்தைக் கெடுத்துவிடும். சிலருக்கு ஒரு  ...