காமராசரின் நகைச்சுவை உணர்வு
காமராசர் சில சமயங்களில் நகைச்சுவையாகப் பேசுவார். அவற்றுள் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒருசில செய்திகளை உங்கள்முன் வைக்கிறேன். # காமராசர் முதலமைச்சரானதும் தலைமைச்செயலகம் நோக்கிச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றன. காவல்துறை அதிகாரிகள் வண்டிகள் சைரன் ஒலியுடன் பின் தொடர வண்டி புறப்பட்டது. சைரன் ஒலியைக் கேட்டதும் காமராசர் "நான் உயிரோடதானே இருக்கேன். அதுக்குள்ள எதுக்கு சங்கு ஊதுறீங்கன்னேன்" என்றாராம். கேட்ட அனைத்து அதிகாரிகள் முகத்திலும் சிரிப்பு. பின்னர் இருக்காதா என்ன? சைரன் ஒலிக்கு இப்படியும் அர்த்தம் இருக்கா.... அதன் பின்னர் அவர் அலுவலகம் செல்லும்போது சைரன் ஒலிப்பதே இல்லையாம். எப்ப...