இரட்டைக்கிளவி _ அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி _ அடுக்குத்தொடர் தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க இன்னும் படி ...இன்னும் படி என்று ஒரு ஆர்வத்தைத் தூண்டும். புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலேயே இலக்கணத்தையும் மனனம் செய்து படித்திருப்போம் கணிதம்கூட எளிதாக இருக்கிறது; ஆனால் இந்த தமிழ் இலக்கணம் இருக்கே ரொம்ப ரொம்ப கடினமான ஒரு பாடம்; புரியவே புரியாது என்று சொல்லிச் சொல்லி புலம்பிய நாட்கள் உண்டு. சிறிது கவனம் எடுத்திருந்தால் இந்தப் புலம்பலுக்கான அவசியம் எழுந்திருக்காது என இப்போது புரிகிறது. தமிழ் இலக்கணம் மிகவும் எளிமையானது என்பது உங்களுக்கும் புரியும். இரட்டைக் கிளவி ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும். ஆனால் தனித்தனியே பிரித்தால் பொருள் தராது.அத்தகைய சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும். மளமள என்று ஒப்பித்தாள். சடசட வென்று ஓடியது. கிடுகிடுவென நடுங்கினேன். வழவழ என்று பேசினாள். வெலவெலத்துப் போனேன். நங்குநங்கு என்று குத்தினேன். கொ...