Posts

Showing posts with the label அடுத்து முயன்றாலும்.....

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள்....

  அடுத்து முயன்றாலும்..... வாழும் காலம் கொஞ்சநாள்தான்.  அந்த குறுகிய காலத்திற்குள்  செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்  ஏராளம் உள்ளன.    அவற்றைத் தாராளமாக  செய்து நல்லவர் என்ற  பெயரெடுக்க வேண்டும் என்று  எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் இது முடிகிற காரியமா ? அதற்குள் இடையில் வந்து முட்டுக்கட்டையிட எத்தனையோ  துன்பங்களும் துயரங்களும் வந்து துவைத்துப் போட்டுவிடுகின்றன. இவற்றிலிருந்து விடுபடுவதுதான் எப்படி? உலகியலைச் சொல்லித் தந்து வீழ்ந்துவிடாதபடி தூக்கி நிறுத்த சான்றோர்களின் அறவுரைகளும் அறிவுரைகளும் தேவையாக இருக்கின்றன. அப்படி நமக்கு ஔவையால் வழங்கப்பட்ட  அறவுரை நூல்தான்  மூதுரை.  நல்ல நெறிமுறைகளைக்  கடைபிடித்து வாழுங்கள் என்று  முத்தான முப்பது பாடல்களை  கல் மேல் எழுத்தாக செதுக்கி   வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்  ஔவை.   முப்பது பாடல்களும் முப்பதுவிதமான வாழ்வியல் உண்மைகளை  கற்றுத் தருகிறது. அறம் தவறாது வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறது. எது அறம் என்று உணர்த்திச் செல்கிறது. சாலையோரமாகஇருந்த ஆ...