மந்தியின் கைமை நிலை
மந்தியின் கைமை நிலை அந்தக் காலத்தில் கைம்பெண்கள் உலகில் வாழ்தல் என்பது கடினமானது . அதைவிட உடன்கட்டை ஏறுதலே மேல் என்று நினைத்தப் பெண்களும் உண்டு. கைம்பெண்களுக்கு மூன்றுவிதமான தடைகள் விதிக்கப்பட்டன. உடை உணவு உறக்கம் மூன்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. அதனால் கைமை நிலை வந்துவிடக்கூடாது என்று பெண்கள் நினைத்தனர். அதனால்தான் கணவன் இருக்கும்போதே போய் சேர்ந்துவிட வேண்டும் என்று பெண்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்வர் மனிதர்கள் வாழ்வில் மட்டும்தான் கைம்பெண் நிலையா? இந்த நிலை வேறு எங்கே இருக்கப் போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ ஒரு மந்தி தன் வாழ்விலும் கைமை நிலை வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறதாம். மந்திகள் வாழ்விலும் கைம்பெண் நிலையா? எல்லா விலங்குகளுக்கும் ஒரே நிலையான வாழ்க்கைநிலை இருப்பதில்லை. மாறுபட்ட வாழ்க்கை நிலையை அமைத்துக் கொள்கின்றன. அவற்றுள்ளும் மந்திகள் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அதனை குறுந்தொகைப் பாடல் ஒன்று சொல்லிச் செல்கிறது. பாடல் இதோ உங்களுக்காக.... கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றெனக் கைமை உய்யாக் காமர...