உள்ளியது எய்தல் எளிதுமன்....
உள்ளியது எய்தல் எளிதுமன்... " உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் " குறள் : 540 உள்ளியது - நினைத்தது, கருதியது எய்தல் - அடைதல் எளிது - வருந்தாமல் கிடைக்கக் கூடியது மன் - (அசைச் சொல்) மற்றும் - பின்னும் தான் - தான், ஒருவன் உள்ளியது - எண்ணியது உள்ளப் பெறின் -இடைவிடாது நினைக்கக் கூடுமினால் நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது. விளக்கம் : நாம் ஒரு செயலை அடைய விரும்பினால் தொடர்ந்து அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும். இடையில் தொய்வு ஏற்பட்டு விட்டுவிடக் கூடாது. எனக்கு இது வேண்டும்.. வேண்டும் என்று உள் மனது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இடைவிடாத ஆசை அதாவது விருப்பம் அதனை அடையும்வரை நம்மை ஓய விடாது துரத்தும். எண்ணிக் கொண்டே இருந்தால் எப்படி பொ...