தாய்மொழி
தாய்மொழி தாயிடமிருந்து கற்கும் முதல் மொழி தாய்மொழி. அதுமட்டுமல்லாது தாயாக இருந்து பண்பாட்டைக் காக்கும்மொழி தாய்மொழி. அறிதலுக்கும் புரிதலுக்கும் தெரிதலுக்கும் உணர்தலுக்கும் காரணமாக இருப்பது மொழி. "மலையிடை பிறந்து மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி பெற்றவை இரண்டு மட்டுமே . ஒன்று செங்கதிர் மற்றது செந்தமிழ்" என்கிறது தண்டியலங்காரம். " தொன்மை முன்மை எண்மை ஒண்மை இயன்மை வியன்மை தூய்மை தாய்மை இளமை வளமை இறைமை மறைமை இனிமை தனிமை அம்மை செம்மை " என்ற பதினாறு பண்புகளும் ஒருங்கே பெற்ற ஒரே மொழி நம் தாய் மொழியாம் தமிழ் மொழி. உலகில் ஆயிரக்கணக்...