Posts

Showing posts with the label தவற விட்ட தருணங்கள்

தவறவிட்ட தருணங்கள்

Image
  தவறவிட்ட தருணங்கள் மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச்  செல்லாத உழவன்.... படிக்கும் காலத்தில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு தூங்கும் மாணவன்... வேலையின்போது சிரத்தை எடுத்துக் கொள்ளாத ஊழியக்காரன்.... பணம் வரும்போது சேமிக்கத் தவறிய மனிதர்கள்...... நல்ல வேலைவாய்ப்புகள் வந்த போது பயன்படுத்தத் தவறிய இளைஞர்கள்.... இவர்கள் எல்லாம் கிடைத்த நல்ல தருணத்தைத் தவற விட்டவர்கள்.    இவர்கள் மட்டுமல்ல...   அனைவர் வாழ்விலும் தவறவிட்ட தருணம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். என் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். உங்கள் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். அதை நினைத்து நினைத்து மருகி இருப்போம். எல்லாவற்றையும் இழந்தது போன்ற விரக்தியில் இருந்திருப்போம். இனி எனக்கு நல்லதே நடக்காதா என எண்ணி எண்ணி வெதும்பியிருப்போம். இளமையில் காதலைச் சொல்ல முடியாமல் தவறவிட்டுவிட்டு  இன்றுவரை அந்த நினைவில்  தவித்துக் கொண்டிருப்பவர்கள் நிறையபேர் உண்டு. அதற்கான தருணம் வாய்த்திருக்கும். இருப்பினும் ஏதோ ஒரு பயம்.... ஒரு தயக்கம்.... உங்கள் காதலைச் சொல்ல விடாமல்  தடுத்திருக்கும். அதனால் உங்கள் காதல...