ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
ஈன்றெடுத்த தாய் வேண்டாள் "பணம் பத்தும் செய்யும்" " பணம் இல்லாதவன் பிணம்" " பணம் பந்தியிலே குணம் குப்பையிலே " இப்படி பணமொழிகள் ஏராளம். இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல. பணமில்லாமல் பட்டு ..பட்டு.. நொந்து நூலாகிப் போனவர்கள் கூறிய அனுபவ மொழிகள். பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்? படிக்க வேண்டுமா பணம். மருத்துவமனைக்குப் போக வேண்டும் டுமா பணம். தவித்த வாய்க்குத் தண்ணீர் வாங்க வேண்டுமா பணம். வயிற்றுப் பசிக்கு சோறு சாப்பிட வேண்டுமா பணம். திருமணத்தை நிச்சயிப்பது பணம். நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி வைப்பதும் பணம். செத்தா பணம். செத்த பிணத்தைப் புதைக்கப்பணம். இடையில் எங்காவது பணமில்லாமல் எதுவும் நடைபெறுகிறதா என்று நினைவுபடுத்திப் பார்த்தால்.... ம்ஹும்....பணமில்லாமல் ஒன்றையும் அசைக்க முடியாது. இதுதான் எதார்த்த நிலைமை. பேசுவதற்கு வேண்டுமென்றால் "பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்தரம்" என்று சொல்லிக் கொள்ளலாம். நிஜ வாழ்க்கையில் பணமில்லாமல் ஒன்ற...