மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின்......
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் ..... மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்" குறள் : 52 மனை- மனைக்கான மாட்சி - நற்பண்பு இல்லாள்கண் - மனைவியிடத்தில் இல்லாயின் - இல்லாதிருக்குமாயின் வாழ்க்கை - வாழ்வானது எனைமாட்சி - எவ்வளவு பெருமைக்குரியதாக ஆயினும் - இருந்தாலும் இல் - பயனில்லாததாகி விடும் இல்வாழ்க்கைகுக்கு ஏற்ற நற்பண்பு மனைவியிடம் இல்லாது போனால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எந்த சிறப்புடையதாக இருப்பினும் அது பயனில்லாதது ஆகிவிடும். விளக்கம் : மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளாக இருக்க வேண்டும். நல்லறம் பேணும் நற்பண்பு கொண்டவளாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நற்பண்பு இல்லா மனைவி வாய்க்கப் பெற்றால் ஒருவன் எத்துணை சிறப்புகள் பெற்றிருப்பினும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. செல்வமும் புகழும் இருந்தால் மட்டும் போ...