பொறாமை வேண்டாமே!
பொறாமை வேண்டாமே... "பொறாமையா.....எனக்கா...அது எங்கங்க கிடைக்கும்... "இப்படி சொல்கிற பருவம் குழந்தைப்பருவம். அதன்பிறகு பள்ளிக்குள் நுழைந்ததுமே உடன் பயிலும் மாணவர்மீது அப்பப்போ பொறாமைப்படும் சூழல் வந்துவிடும். நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன் கையில் இருந்தால் மெதுவாக பொறாமை வந்து எட்டிப் பார்க்கும். அதே போன்ற ஒன்று தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிக்க வைக்கும். வளர வளர பொறாமையும் கூடவே வளர்ந்து கொண்டு இருக்கும். பொறாமை உள்ளவர்கள் அடுத்தவர் படும் துன்பத்தைப் பார்த்து அதில் மகிழ்ச்சி கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள். நம்மிடம் இல்லாத ஒன்று... நமக்கு கிடைக்காத ஒன்று... நாம் அடைய விரும்பும் ஒன்று... இன்னொருவரிடம் இருந்தால் ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு வந்து எட்டிப்பார்க்கும். அவரைப் பற்றித் தரக்குறைவாக பேச வைக்கும். அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி இன்பம் காணும். பார்த்தும் பார்க்காததுபோல போக வைக்கும். முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்க...