பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் "பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம். "பசித்தபின் புசி "என்று அறிவுரை சொல்வதை அலட்சியப்படுத்தியிருப்போம். இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்? அது என்ன பத்துப்பா... ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா! எனக்கும் நெடுநாளாக அதே ஆவல்தாங்க. யாரிடம் போய் கேட்பது? என்னவென்று கேட்பது? எந்தக் கேள்விக்கும் சரியான விடை வைத்திருப்பவர் யாராக இருக்கும்? இப்படி ஓராயிரம் கேள்விகளைக் கேட்டு மனதைக் குழப்பிக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். "அம்மா...."என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். பாட்டி ஒருவர் பக்கம் வந்து நின்று புன்னகைத்தார். "யாரம்மா நீங்கள்? என்ன வேண்டும்? " என்றேன். "நடந்து வந்த களைப்பு. சற்று இந்தத் திண்ணையில் உட்காரலாமா? மரியாதையோடு அனுமதி கேட்டார் . "ஓ....தாராளமாக அமருங்கள்" என்றேன். திண்ணையில் உட்கார்ந்தவர் முகத்தில் நடந்து வந்த களைப்பு தெரிந்தது. வீட்டிற்குள் சென்று ஒரு குவளையில் தண்...