இணரூழ்ந்தும் நாறா மலரனையர்
இணரூழ்ந்தும் நாறா மலரனையர்.... இணரூழ்ந்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்" குறள் : 650 இணர் - கொத்தாக ஊழ்ந்தும் - மலர்ந்திருந்தும் நாறா - மணம் தராத மலர் - பூ அனையர் - ஒத்திருப்பர் கற்றது - கற்ற நூல் உணர - பிறர் அறியும்படியாக விரித்து - தெளிவாக உரையாதார்- உரைக்க இயலாதவர் கற்றதை பிறர் உணர விளக்கிச் சொல்ல இயலாதவர் கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவராவார். விளக்கம்: பூக்கள் கொத்தாக மலர்ந்திருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாறா மலர் கண்டு பாராமுகமாகச் செல்வதுதான் மனித இயல்பு. ஏன் வண்டுகள்கூட மணம் இருக்கும் பூக்களைத் தான் நாடி வரும். பூக்கள் என்றால் அதில் மணம் இருக்க வேண்டும். மணம்தான் பூக்களுக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வண்ணம் பார்க்கக் கவர்ச்சிகரமாக இருக்கலாம். அது பிறரால் விரும்பப் பட மாட்டாது. அதுபோல கற்றவர் என்றால் தாம் கற்ற நூலின் பொருளை பிறர் முன் எடுத்துச் சொல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும். தாம் கற்றதைப் பிறர் அறிய விரித்துச் சொல்ல இயலாது போனால் அவர் பெற்...